Subscribe Us

header ads

பின்னவலயில் மனிதர்களுக்கு கூடு, தெஹிவளயில் மிருகங்களுக்கு கூடு....


பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலையை சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க நேற்று திறந்து வைத்துள்ளார்.
இலங்கையில் காணப்படும் இரண்டாவது பெரிய மிருகக்காட்சிசாலை இதுவாகும். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மிருகங்கள் கூண்டிலில் போடப்பட்டு மக்கள் சுதந்திரமாக நடமாட விடப்பட்டுள்ளது. ஆனால்,  இங்கு விலங்குகள் சுதந்திரமாக நடமாட விடப்பட்டு மனிதர்களுக்கு கூண்டுகள் அடிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்த புதிய மிருகக்காட்சிசாலையை நேற்று 17 ஆம் திகதி முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரையில் சகலரும் இலவசமாக பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments