Subscribe Us

header ads

தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்ட அம்பாறை மாவட்ட பொதுமக்கள் இம்முறை அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

அபு அலா -

பிறக்கப்போகும் தமிழ் - சிங்கள புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடுவதற்காக அம்பாறை மாவட்ட தமிழ் சிங்கள மக்கள் ஆடைகள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 இன்று காலையில் (13) அக்கரைப்பற்று, திருக்கோவில், தம்பிலுவில் போன்ற பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் தங்களின் ஆடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாண்டு வியாபாரத்துக்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் பல வியாபாரிகள் அம்பாறை மாவட்ட பிரதேங்களுக்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments