வாகன வருமான உத்தரவு பத்திரத்தை இணையத்தின் மூலம் வழங்கள் நிகழ்வு இன்று காலை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா வித்தியாலயத்தில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திருமதி வீ .ரவீந்திரன் தலமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்றின் பெர்ணாண்டோ, மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, மாகாண சபையின் பிரதம செயலாளர் டீ.எம்.சரத் அபேயகுணவர்டண ஆகியோருடன் அரச நிருவாகத்துறையினரும் கலந்து கொண்டனர்.
1 Comments
Mohammed Nibras
ReplyDelete