Subscribe Us

header ads

அட்டாளைச்சேனை பிரதேசத்தரில் ஆமற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

அபு அலா - 


அரசாங்கத்தின் 100 நாள் துரித வேலைத்திட்டத்தின் கீழ்  நகர அபிவிருத்திநீர்வழங்கல் மற்றும் வடிகாலைமைப்புச்சபை  அமைச்சர் ரவூப் ஹக்கீமின்  பணிப்புரைக்கு அமைவாகஅட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை காலை (10) அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகர அபிவிருத்திநீர்வழங்கல் மற்றும்  வடிகாலைமைப்புச்சபையின் அதிகாரிகளுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப், நகர அபிவிருத்தி அமைச்சின்இணைப்பாளர் யூ.எல்.எம்.எல்.முபீன்அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர்ரீ.ஜே.அதிசயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பொது விளையாட்டு மைதானம், கடற்கரை பூங்கா, சந்தை சதுக்கம், புதிய பிரதேச சபை கட்டடம் போன்ற அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய இடங்களைஇக்குழுவினரார் பார்வையிட தீர்மானிக்கப்பட்டு குறித்த வேலைகளை துரிதமாகமேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையினரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்  கேட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments