கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இராணுவப் படைப்பிரிவுகளும் இணைந்து மட்டக்களப்பு சிவாநந்தா விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றினை நேற்று 09 ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜெனரல் என்.ஜே. வல்கம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, , திருமதி ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், விஷேச அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறுக், அலி ஷாஹீர் மெளலானா, ஏராவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் இராணுவ அதிகாரிகள் சமயத் தலைவர்கள் என்று பலரும் இராணுவ படையினர்களும் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வில் பல நிகழ்வுகள் இடம்பெற்று அதற்கான பெறுமதியான பரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.
0 Comments