ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட குழுவினர் முன்னைய ஆட்சிகாலத்தில் அந்த விமானச்சேவை தொடர்பாக இடம்பெற்ற பல மில்லியன் டொலர் ஊழல்கள் குறித்து கண்டுபிடித்துள்ளனர். இந்த ஊழல்கள் அந்த குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
விமானத்துடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் பொறுப்பை யாருக்கு வழங்குவது போன்ற விடயங்களில் ஆரம்பித்து ஊழல் சகல விடயங்களிலும் இடம்பெற்றுள்ளது.தகுதியற்ற பணியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இது தவிர பாதுகாப்பு நடைமுறைகளில் பாரிய மீறல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பிட்ட விசாரணைகளை மேற்கொண்ட மூத்த சட்டத்தரணி ஜே.சி வெலியமுன தலைமையிலான குழுவினர் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க பாரிய அதிகார துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இளம்பணிபெண்கள் குறித்து அவர் கொண்டிருந்த ஆர்வம் ஏற்கனவே நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த விமானசேவையின் நிலையை மேலும் மோசமானதாக்கியுள்ளது.
ஸ்ரீலங்கன் விமானசேவை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு செலவு குறைவான வழிமுறைகள் காணப்பட்ட போதிலும் முன்னைய அரசாங்கம் 2.3 பில்லியன் செலவில் புதிய விமானங்களை கொள்வனவு செய்தல் போன்ற நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக முழுமையான குற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ள வெலியமுன குழுவினர், முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான நிசாந்த விக்கிரமதுங்கவை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைசெய்துள்ளது.
முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோர்தங்களது பாவனைக்காக அதநவீன ஆடம்பர விளையாட்டு கார்களை போலியான காரணங்களை , போலியான ஆவணங்களை பயன்படுத்தி பெற்றுக்கொண்டமையும் தெரிய வந்துள்ளது. இது தவிர ஆடம்பர கார்கள் பலவற்றையும் அவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
எனினும் இவற்றைவிட புதிய விமான கொள்வனவு மற்றும்,எயர் டக்சி சேவையை ஆரம்பித்தல் போன்ற நடவடிக்கைகளிலேயே மிகவும் பாரதூரமான ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. பல மில்லியன் டொலர் செலவில் ஆரம்பிக்கப்பட்ட எயர் டக்சி சேவையை பின்னர் கைவிட வேண்டிய நிலைஉருவானகு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் வேண்டுகோளின் பெயரில் விமானப்பணிப்பெண் ஓருவரிற்கு ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதற்கு அனுமதி வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
எனினும் உண்மையில் இவர் நாமல்ராஜபக்ச கேட்டுக்கொண்டதின் பெயரில் அவரது அரசியல் வேலைகளுக்காகவே விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரிற்கு ஸ்ரீலங்கன்விமான சேவையே தொடந்தும் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கியுள்ளது.அவரிற்காக மாத்திரம் 4.2மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளனர்.எனினும் அவரின் சேவை என்னவென குறிப்பிடப்படவில்லை.
இந்த விடயம் தெரியவந்ததை தொடர்ந்து விசாரணைக்குழு குறிப்பிட்ட பணிப்பெண்ணிற்கு வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகளை மீளப்பெறுமாறு விசாரணைகுழு அறிவுறுத்தியுள்ளது.மேலும் மக்களின் வரிப்பணத்திலிருந்து இவ்வாறு அவரிற்கு அவசியமற்ற விதத்தில் பணத்தை வழங்குமாறு உத்தரவிட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் முன்னாள் தலைவர் ஸ்ரீலங்கன் விமானச்சேவைக்கான பிரான்ட் அம்பாசடர் என்ற புதிய பதவியை ஏற்படுத்தி தனக்கு நெருக்கமான விமானபணிப்பெண்ணை அதற்கு நியமித்துள்ளார்.இவர்கள் இருவரும் உலகம் முழுவதையும் சுற்றி வந்துள்ளனர்.
எமது விசாரணைகள் மூலமாக முன்னாள் தலைவர் தன்னுடைய பணியாளர்களுடன் இணைந்து ஸ்ரீலங்கன் விமானசேவையை துஸ்பிரயோகம் செய்தார் என எங்களால் தெரிவிக்கமுடியும்,இதன் காரணமாக அவர் அந்த நிறுவனத்தின் பெயரிற்கு களங்கத்தை ஏற்படுத்தினார்,பாரிய நட்டத்தையும் உண்டாக்கினார் என விசாரணை குழு தெரிவித்துள்ளது.
விமானநிறுவனத்தின் தலைவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும்போது அது குறித்து விவாதிக்கும் கலாச்சாரம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் காணப்படவில்லை.பிரதம நிறைவேற்று அதிகாரிகயாக விளங்கிய சந்திரசேன அந்த பதவிக்கு பொறுத்தமற்றவர் எள்பதை கண்டுபிடித்துள்ளோம் எனினும் அவரிற்கு 1.5 மில்லியன் ஊதியமும் ஏனைய சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அவர் மிகின் எயர் மற்றும் மொபிடெல் ஆகியவற்றின் பிரதமநிறைவேற்று அதிகாரி எனவும்சம்பளம் பெற்றுள்ளார்,இவர்கள் குறித்து குற்றவியல் விசாரணைகள் இடம்பெறவேண்டும்.
முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசிதவிற்கு மோட்டார் உதிரிபாகங்களை அனுப்பும் சட்டவிரோத நடவடிக்கையை கண்டுபிடித்து தடுத்த பிரிட்டன் முகாமையாளரை மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளனர்.என விசாரணை குழு தெரிவித்துள்ளது.
-GTN-


0 Comments