-CM MEDIA EASTERN-
சிகிரியா குன்றிலுள்ள சுவரோவியத்தில் தனது பெயரை எழுதியமையினால் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியைச் சேர்ந்த உதய சிறி என்னும் யுவதியின் விடுதலைக்காக மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட யுவதியின் விடுதலையானது வயதான தாயின் அழுகையையும், குடும்பத்தவர்களின் துக்ககரமான நிலையையும் நிறுத்தியுள்ளது. மிகவும் கவலையில் இருந்த குறித்த யுவதியின் தாய் மற்றும் குடும்பத்தினர் இன்று மிகவும் சந்தோஷத்தில் இருப்பதனை நினைக்கின்றபோது எமக்கும் சந்தோஷமாக இருக்கிறது.
குறித்த ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த யுவதிக்கு ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பு நாட்டில் பலராலும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. என்பது ஊடகங்கள் மூலமாக தெளிவாகப்புரிகிறது.
உதய சிறிக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதனிரவு கையொழுத்திட்டுள்ளமைக்கு காரணமாக இருந்த
குறித்த யுவதிக்காக குரல் கொடுத்த அனைத்து அமைப்புக்களுக்கும் நல்லெண்ணம் கொண்டவர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நன்றியினைத்தெரிவித்துள்ளார்.
குறித்த யுவதியின் விடுதலைக்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும் கடந்தவாரம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


0 Comments