திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவிற்கு நாட்டுக்குள் பிரவேசிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் விசா வழங்காதமைக்கு சீன அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
தலாய் லாமாவின் விஜயத்தை எந்தவொரு நாடும் அனுமதிக்கக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு. எனினும் சீன அரசாங்கம் ஸ்ரீலங்காவுடன் சிறந்த உறவுகளைப் பேணிக்கொள்ளவே விரும்புகிறது.
மேலும் ஸ்ரீலங்காவுடனான பாரம்பரிய நட்புறவையும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் தமது நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது என அவர் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை மஹாபோதி அமைப்பின் தலைவர் உட்பட ஸ்ரீலங்காவிலுள்ள பௌத்த தலைவர்கள் நால்வர் அண்மையில் தலாய் லாமாவை சந்தித்திருந்தனர்.
இதன்போது ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு அவர்கள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது


0 Comments