ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு நாட்டை விட்டு வெளியேறியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று நாடு திரும்பியுள்ளார்.


அவரை விசாரிக்கும் நிமித்தம் நாட்டுக்கு
அழைத்து வர நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் சட்டத்தரணிகள் மூலம்
தான் ஏப்ரல் 21ம் திகதி நாடு திரும்பவுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்திருந்த
அவர் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்களால் விமான
நிலையத்தில் வைத்து பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுடன் பௌத்த துறவிகள்
அவருக்கு ஆசீர்வாதமும் வழங்கி அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments