Subscribe Us

header ads

Flash News: பசில் வருகை! கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதிக்கு தற்காலிக மூடுவிழா ( Photo)

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் (ARRIVAL) பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பகுதி மூடப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பகுதிக்கு வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் வருகை காரணமாக இவ்வாறு விமான நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் விமான நிலையத்திற்கு வெளியே குழுமியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பசிலை வரவேற்க வந்த கூட்டம்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பாரிய கூட்டம் ஒன்று கூடியுள்ளது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தன், வட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார, மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்சா உட்பட அரசியல்வாதிகள் பலர் வருகை தந்துள்ளனர்.








Post a Comment

0 Comments