Subscribe Us

header ads

நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத் தரையில், உறங்கியது ஏன் தெரியுமா..?

தந்தையை பாதுகாக்க மகன் தரையில் உறங்குவதாக ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று 22.04.2015 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்காவே நாடாளுமன்றில் போராட வேண்டும். எனினும், நேற்று தந்தைக்காக மகன் நாடாளுமன்றத் தரையில் உறங்கினார். இலங்கையைச் சேர்ந்த நாம் விரைவில் கடந்த காலத்தை மறந்து விடுகின்றோம்.

நாட்டின் அதி உயர் நிறுவனமாக நாடாளுமன்றில் முக்கியமான பிரச்சினைகளுக்காகவே குரல் கொடுக்க வேண்டும். யாரைக் காப்பாற்ற மகனும் ஒரு சிலரும் நாடாளுமன்ற தரையில் படுத்துறங்கினார்கள்?

இலங்கை நாடாளுமன்ற வராற்றில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றதில்லை. அவர்களின் வங்குரோத்து நிலைமையே இதன் மூலம் வெளிப்படுகின்றது என ஹரின் பெர்னாண்டோ ரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments