முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவை, எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டது.
இதேவேளை பொருளாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்கள முன்னாள் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரொட்ரிகோ மற்றும் ரணவக ஆகியோரையும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடபில் இவர்கள் இன்று காலை முதல் கொழும்பு குற்றத் தடுப்பு பணியகத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் சுமார் 7 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர், குற்றத் தடுப்பு பணியகத்தின் நிதி மோசடிப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
0 Comments