Subscribe Us

header ads

வியர்வைப்பட வேண்டும், வித்துக்கள் வளர


கொளுத்தும் வெயிலினிலே
வெட்டவெளியினிலே 
வெடவெடக்க 
வேலைசெய்யும் உனை 
உலகம் மறந்துதான் போனதே.. 

ஏசியினுள்ளே அமர்ந்தபடி 
எளிமையென 
எள்ளிநகைகிறது 
நாகரிக உலகம்.. 

உருவாக்குவதொன்றும்
எளிதல்ல 
உலகம் உண்டுக்களிக்க
கடனில் வெந்துபோகும் உனை
உலகம் மறந்துதான் போனதே..


கதிர் எப்போது முற்றும் 
கடன்தொல்லை தீர
காத்திருப்பு வீணாகிறது
முற்றிகொண்டு போகிறது கடன் 
நாற்றிவிட்ட நாற்று 
வெளிவரமுன்னே..


வியாக்கியானம் 
விளம்பரம் உதவுவதில்லை 
விளைநிலத்தில் 
வியர்வைப்பட வேண்டும் 
வித்துக்கள் வளர..


மந்தைகள் 
வரிசையில் வருவதுபோல் 
சந்தைகளும் 
வரவேற்க வேண்டும் 
கடனுக்கு முடிவு சொல்ல..


ஏர்படும் 
சோறுதான் 
என்றுமே சிறந்ததே 
ஏழையின் வியர்வைதான் 
என்றுமே உயர்வானதே.


எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் – கத்தாரிலிருந்து

Post a Comment

0 Comments