Subscribe Us

header ads

30 வருடங்களின் பின் யாழ் பல்கலை முஸ்லீம் மஜ்லீஸினால் இன்கிலாப் வெளியீடு (படங்கள்)

 
பாறூக் ஷிஹான் 
(யாழ் பல்கலைக்கழகத்தில் 30 வருடங்களிற்கு பின்னர் வெளியிடப்பட்ட இன்கிலாப் சஞ்சிகை குறித்து இக்கட்டுரை வெளியாகின்றது.)

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வரலாற்றில்  முக்கிய மைல்கல்லை முஸ்லீம் மஜ்லீஸ் அமைப்பு அடைந்துள்ளது. பாரம்பரியமிக்க அக்கல்விக் கூடத்தில் கடந்த 11 ஆம் திகதி சனியன்று ஒரு வரலாற்று பொக்கிசம் ஒன்று அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.அது தான் இன்கிலாப் சஞ்சிகை. 30 வருடங்களிற்கு பின் இச்சஞ்சிகை வெளிவந்துள்ளமையானது அங்கு கல்வி கற்கின்ற ஒவ்வொரு முஸ்லீம் மாணவர்களின் தன்னம்பிக்கையின் வெற்றியை காட்டுகின்றது.

2009ம் ஆண்டு  யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியுடன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில மீண்டும் முஸ்லிம் மாணவர்களின் வருகை ஆரம்பமான நாள் முதல் இன்று வரை (2015) இதற்கான அடித்தளம் நாட்டப்பட்டு வந்தது.

இவ்வாறாக மாணவர்களின் தொடர்ச்சியான வருகையும் யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் குறித்த முக்கியத்துவத்தை உணர்த்தியது.அந்த அமைப்பினை முறையாக பதிந்து தொடர முற்பட்ட வேளை தான் இந்ந இன்கிலாப் என்ற சஞ்சிகை தொடர்பாக அறியப்பட்டது.

இன்கிலாப் என்றால் என்ன...

அந்தக் காலத்தில் சஞ்சிகைகளுக்கு என்று ஒரு பெரிய இடமிருந்தது. யாழ்ப்பாணத்தில் அதிகம் சஞ்சிகைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் அவற்றில் சிலவே பதிவு பெறுகின்றன. பல்கலைக்கழக சஞ்சிகைகள் பெரும்பாலும் அக் காலத்தில் ஒரு பெரிய வரலாற்றையே சுமந்திருந்தன. குறிப்பாகப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம், முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியன இதில் பெரும் பங்கெடுத்தன. இவ்வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸின் வெளியீடாக அமைந்ததுவே 'இன்கிலாப்'.ஆகும்.

'இன்கிலாப்' என்பது ஒரு அரபுச் சொல். புரட்சி என்ற கருத்துப்படும். முன்னைய காலம் என்றால் இச்சொல் பற்றிய பரிச்சயமும் இருந்திருந்தால் சிலவேளை இந்தச் சஞ்சிகையும் தடைசெய்யப்பட்டிருக்கக் கூடும். ஆனால் இன்கிலாபுக்கு நடந்த கதி வேறு. யாழ்ப் பாணத்திலிருந்தும் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தி ருந்தும் முஸ்லிம்கள் சூன்யமாகிய சூழ்நிலையிலிருந்து 'இன்கிலாப்' வரவில்லை.
 கிட்டத்தட்ட தடை செய்தது போன்றுதான். ஒரு சஞ்சிகையை அல்ல ஒரு சமூகத்தையே தடை செய்த சோகம் அது. ஆனால் இன்று முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிவிட்டனர். யாழ் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் அதிகமாக கல்வி கற்கின்றனர். முஸ்லிம் மஜ்லிஸூம் சிறப்பாக  இயங்குகின்றது. அதன் தொடர்ச்சியாக (11.04.2015)  அன்று இன்கிலாப்; சஞ்சிகையும் பெரும் சவால்களை சுமந்து  வெளிவந்து இருக்கின்றது.

1975, 1976 ஆம் ஆண்டுகளில் யாழ்ப் பாணம் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்பட்ட 32 மாணவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் உருவானது. அப்போது அதனுடைய ஆண்டிதழாக 'இன்கிலாப்' வெளிவந்தது. யுத்தத்திற்கு முன்னர் ஐந்து இதழ் வெளி வந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது;. தற்போதைய இன்கிலாப்  ஆறாவது இதழாகும்.

முஸ்லிம்களுடைய வரலாற்றையும் அரசியல் விபரங்களையும் விளங்கிக் கொள்வதற்கு 'இன்கிலாப்' பெரிதும் உதவியிருக்கிறது. இன்கிலாபினூடாக முஸ்லிம்களின் சமூக, அரசியல், கல்வி வரலாற்றை விளங்கிக் கொண்டிருக்க முடியும். ஆனால் அது துரதிஸ்டவமாக இடையிலே அறுந்து விட்டது. முஸ்லிம்களின் காத்திரமான இதழாக வெளிவந்த இன்கிலாபினூடாகப் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. 

இலங்கை முஸ்லிம்களின் சட்டத்துறைப் பாரம்பரியம் தொடர்பாகத் தொடர்ச்சியான கட்டுரை வெளிவந்தது. அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நிலப் பிரச்சினை குடியேற்றப் பிரச்சினை தொடர்பாக எம்.வை.எம். சித்தீக்கின் கட்டுரை, இலங்கை குடியரசில் முஸ்லிம் சமூகம் தொடர்பாக எம்.ஏ.எம். ஹூசைன் ஓய்வு பெற்ற நீதிபதியின் கட்டுரை, அரபுத் தமிழ் பற்றிய எம்.ஏ. நுஃமானின் ஆய்வுக் கட்டுரை, இலங்கை முஸ்லிம்களும் பல்கலைக் கழகக் கல்வியும் தொடர்பாக பேராசிரியர் சந்திரசேகரத்தின் கட்டுரை முதலானவை எடுத்துக்காட்டாக இங்கு குறிப்பிடத்தக்கன. 

இதேபோன்று பேராசிரியர் கா. இந்திரபாலா, க. கைலாசபதி, சு. வித்தியானந்தன், எம்.எஸ்.எம். அனஸ், எம். இஸற். எம். மல்ஹர்டீன், எம்.ஐ.எம். அமீன் முதலானவர்களும் கட்டுரை, செய்திகள் எழுதியதாக அறிய முடிகிறது.

இலங்கை முஸ்லிம்களுக்குத் தனியானதொரு அரசியல் கட்சி அவசியமா? இல்லையா? என்பது பற்றி ஒரு தொடர் விவாதம் இச்சஞ்சிகையினூடாக முன்வைக் கப்பட்டது. அப்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்த எம்.எல்.ஏ. காதர் முஸ்லிம்களுக்குத் தனியானதொரு அரசியல் கட்சி அவசியம் என்ற கட்டுரையினை எழுதியிருந்தார். 

பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாகத் தொடங்கப்பட்ட காலத்தில் இக்கட்டுரை பிரபலமாகப் பேசப்பட்டது. பல ஊர்களில் பிரசுரமாகப் பிரதி பண்ணப்பட்டு விநியோகிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இச்சஞ்சிகையில் மிகப் பிரபல்யமான கவிஞர்களான மு. மேத்தா, கவிக்கோ அப்துர் ரஹ்மான், வேதாந்தி முதலானவர்களுடைய கவிதைகளும் அப்போதே இடம்பெற்றுள்ளன. எனவே பல்கலைக்கழக சஞ்சிகை வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்த இன்கிலாப் மீண்டும் வெளிவந்து ; முஸ்லிம்களின் வரலாற்றினை வெளிப்படுத்துகின்ற முக்கிய இதழாக திகழ்கின்றது.


மஜ்லிஸின் உதயமும் அழியா நினைவுகளும்  (1974-1987)

1974ம் வருடம் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படட்ட இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், இலங்கையின் கல்வி வரலாற்றில் அரும் பங்காற்றி வருகின்ற பெரும் நிறுவனமாகும்.

இது பல ஆயிரக்கணக்கான புத்திஜீவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும்.இந் நிறுவனத்திற்கு 1975ம் ஆண்டு முதல் முஸ்லிம் மாணவர்களும் உள்ளீர்க்கப்பட்டனர்.

ஆன்மீகக்கல்வி லௌஹீகக் கல்வி என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் நவீன கல்வித்திட்டத்தில் மாணவர்களின் ஆண்மீகத்தேவையின் திருப்திப்பாடு போதுமாக்கப்படாதிருந்தது.

எனவே பல்கலைக்கழக வாழ்க்கைக் காலத்தில் இஸ்லாமிய வாழ்க்கை நடைமுறைகளை விளங்கிக் கொள்ளவும். ஏனைய சமய நெறிகளைப்பற்றி அறியவும் சக மாணவர்களுடன் புரிந்துணர்வுடன் நல்லுறவுகளை ஏற்படுத்த வகை செய்வதற்கும், மாணவர்களின் கூட்டுறவான செயற்பாடுகளுடனான ஒத்துழைப்பு அவசியப்பட்டது.
இதனை நிவர்த்திக்கும் வகையில் 1977ம் ஆண்டு ஜுலை மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாண வளாகத்தில் 34 மாணவர்களுடன் முதலாவதாக முஸ்லிம் மஜ்லிஸ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதன் ஆரம்பகால செயலவை உறுப்பினர்களின் பட்டியல் கீழ்வருமாறு அமைந்தது

போஷகர் மௌலவி கே.எம்.எச். காலிதீன் பி.ஏ (சிறப்பு),பெரும் பொருளாளர் கவிஞர் எம்.ஏ. நுஃமான் பி.ஏ (சிறப்பு) ,தலைவர் ஐ.எல்.அப்துல் ஜப்பார் ,உப தலைவர் எம்.ரி.அஹமட் ,பொதுச் செயலாளர் ,ஏ.எல்.ஜௌபர் சாதிக் ,உதவிச் செயலாளர் ஐ.எல்.மதார் ,சமூக தொடர்பு செயலாளர் வை.எம்.இஸ்மாயீல் ,இளம் பொருளாளர் எம்.எஸ்.எம். காஸிம் ,இணைப் பத்திராதிபர்கள் எம்.ஏ.கே.எம். அப்துல் ஹமீட் ,ஏ.ஜே.நூருல் பாக்கியா ,இவ்வாறு முதற் செயலவை யாப்பு, இலட்சினை போன்றவற்றை தயார்செய்தனர்.

இத்தகவல்களோடு மஜ்லிஸின் கடந்தகால பதிவுகள்  கீழ்க்கண்டவாறு அமைகின்றது.

1977-05-07 மஜ்லிஸ் உறுப்பினர்கள் சர்வ வளாக மஜ்லிஸினால் ஒழுங்கு செய்யப்பட்ட கல்வி அமைச்சருடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்

1977-07-22 யாழ்ப்பாண வளாகத்தில் முஸ்லிம் மஜ்லிஸ் உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது

1977-10-05 வளாகத்தில் மீலாத் தினக் கலந்துரையாடல் இடம்பெற்றது
பிரதம அதிதியாக பேரா.க.கைலாசபதி அவர்களும் சிறப்பு பேச்சாளராக யாழ் மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் எம்.எம்.அப்துல் காதர் அவர்களும் கலந்து கொண்டனர்

1977 முதலாவது இன்கிலாப் வெளியடப்பட்டது

1979 மஜ்லிஸினால் க.பொ.த. உயர் தர மாணவர்களுக்காக வறக்காப்பொளை பாபல் ஹஸன் மகா வித்தியாலயத்தில் இலவச கருத்தரங்கு வகுப்புக்கள் நடாத்தப்பட்டன.
இன்கிலாப் இரண்டாவது இதழ் வெளியிடப்பட்டது

1980-02-26 ஆத்மீக மேம்பாட்டுக்காக தப்லீக் ஜமாஅத்தின் உதவியுடன் வாராந்த நிகழ்ச்சியொன்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக ஆரம்பிக்கப்பட்டது.

1980 ஹிஜ்ரா விழா, மீலாத் கருத்தரங்குகள், மௌலிது வைபவங்கள் இடம்பெற்றன

1980-06-26 சிரேஸ்ட மாணவர்களுக்கான பிரிவுபசார விழா நடைபெற்றது

1981-02-05 மீலாத் விழா நடைபெற்றது

1981-03-14 விரிவுரையாளர்களும் மாணவர்களும் சாவகச்சேரி பள்ளிவாசலுக்கு ஒரு நாள் ஜமாஅத் சென்றார்கள்

1981-05-29 புதிய அங்கத்தவர்களுக்கான வரவேற்புபசார நிகழ்வு இடம்பெற்றது

1981-07-07 மாணவிகளுக்காக கொழும்பிலிருந்து வருகை தந்த பெண்கள் ஜமாஅத்தினர் பிரத்தியேக நிகழ்வுகளை நடாத்தினர்.

1981-07-10 மாணவர் அவைத் தலைவர் திரு. நாகலோகநாதன் அவர்களின் மூலம் உபவேந்தர். சு. வித்தியானந்தன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு ஜும்ஆத் தொழுகைகளை நிறைவேற்ற விசாலமான தொழுகை அறை வழங்கப்பட்டது.

முதல் ஜும்ஆ குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தியவர் மௌலவி கே.எம்.எச். காலிதீன் அவர்கள் ஆவார்

1981 பல்கலைக்கழக மாணவர் அவையின் உப செயலாளராக ஏ.எம்.கமால்தீன், மற்றும் உறுப்பினர்களாக எம்.எஸ்.எம்.புவாத், என், பி.இப்றாஹீம் ஆகியோரும், தமிழ்ச்சங்க உறுப்பினராக கே.எம். பரீதும், விளையாட்டுக்குழு உறுப்பினராக எம்.எஸ்.ஜவாஹிர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டு சேவையாற்றினர்.

முன்றாவது இன்க்pலாப் இதழ் வெளியிடப்பட்டது

1981-11-17 புதிய மஜ்லிஸ் நிர்வாகம் பொறுப்பேற்றது

1981 (நோன்பு கால இரவுத் தொழுகை) தறாவீஹ் தொழுகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன
ஸஹர் உணவுகள் வீடுதிகளுக்கு அண்மையில் வழங்க ஏற்பாடு செய்ப்பட்டது.

பாகிஸ்தான், பங்களாதேஸ், மலேசியா போன்ற சநாடுகளிலிருந்து வருகை தந்த மார்க்கப் பிரச்சாரகர்கள் ஈமானிய வலுப்படுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

1982-01-29 புதிய மாணவர்களுக்கான வரவேற்புபசார நிகழ்வு நடைபெற்றது

1982-02-27 மஜ்லிஸ் உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சரினால் கூட்டப்பட்ட விஷேட மாநாட்டிற் கலந்து கொண்டனர்

1982-07-01 பலஸ்தீன மக்களுக்கெதிரான இஸ்ரேலிய ஆக்கிரப்பை எதிர்த்து மாணவர் அவையுடன் மஜ்லிஸ் உறுப்பினர்களும் இணைந்து பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர் 

1982-07-02 லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கெதிராக கண்டனக் கூட்டமொன்று நடாத்தப்பட்டது.

1982-07-16 சிரேஸ்ட மாணவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வு நடைபெற்றது.
1983 நான்காவது இன்கிலாப் இதழ் வெளியிடப்பட்டது

1987-10 இராணுவ நடவடிக்கையில் மஜ்லிஸ் உறுப்பினர் எஸ்.எச் முஸ்திக் உயிரிழந்தார்.

இஸ்லாமிய கலாச்சார நிலையமாக தொழிற்பட்டு வந்த பல்கலைக்கழக தொழுகைஅறையும் இராணுவ நடவடிக்கையின்போது சேதமாக்ப்பட்டது.

1987-10 நிர்வாகத்தினரின் அக்கறையுடனான முயற்சியினால் தொழுகை மண்டபம் துரிதமாக திருத்தியமைக்கப்பட்டது
1987 இன்கிலாப் ஐந்தாவது இதழ் வெளியிடப்பட்டது

இதற்குப் பின்னரான தகவல்களைப்; பெற்றுக்கொள்ள தற்போதைய மாணவர்களின்  பெருமுயற்சியில் இறங்கி முன்னைய பழைய மாணவர்களின் அனுபவப்பகிர்வுகளின் உதவியுடன்; தொடர்ச்சியாக முஸ்லிம் மஜ்லிஸினை பலப்படத்தினர். 

(2009-2014) காலப்பகுதியில் இப்பலப்படுத்தலானது பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வந்தது.
 

அடுத்து யுத்தம் நிறைவடைந்த பின் 2009 ஆண்டில் இருந்து.....


வரலாற்று பாரம்பரியமிக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியுடன் 2009ம் ஆண்டு மீண்டும் முஸ்லிம் மாணவர்களின் வருகை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு 12 மாணவர்களும் கலைப்பீடத்திற்கு 05 மாணவரகள் உள்ளடங்களாக மொத்தமாக 17 மாணவர்களுடன் ஆரம்பமானது.

இக்காலகட்டத்தில் இம்மாணவரகள் பல்வேறு வகையான சவால்களை எதிர்நோக்கினார்கள்.

தங்களோடு சக மாணவர்களாக கல்வி; பயிலுகின்ற முஸ்லிமல்லாத மாணவர்களில் விசேடமாக வட புல மாணவர்களுக்கு கடந்த கால பயங்கரவாத சூழ்;நிலை மற்றும் வடபுல முஸ்லிம்களின் இடம் பெயர்வுகளின் காரணமாக முஸ்லிம்கள் பற்றியும் ;இஸ்லாமிய சட்ட திட்ட நெறிமுறைகள் பற்றியும் அறிந்துகொள்வதங்காக வினவுகின்ற மாணவர்களின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டிய பாரிய பொறுப்பாகவும் காணப்பட்டது

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் அடையாளமாகவும் உயிர்நாடியாகவும் முஸ்லிம் மஜ்லிஸ் உள்ள முக்கியத்துவம் உணரப்பட்டது. முஸ்லிம் மாணவர்களின் கல்வி கலாசாரம் ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் பொருளாதாரம் போன்ற நடவடிக்கைகளில் இவ் அமைப்பின் செயற்பாடுகள் பல்கலைக்கழகங்களில் வியாபித்தும் காணப்படுகின்றது. 

எனினும் கடந்த கால போர்ச்சூழல் காரணமாக முஸ்லிம் மாணவர்களின் வருகை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படவில்லை. இதனால் முஸ்லிம் மஜ்லிஸினுடைய பிரசன்னமும் இல்லாமற் போயிருந்தது

ஆனாலும் 2009ம் ஆண்டு முஸ்லிம் மாணவர்களினுடைய வருகை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானதை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு றமழான் மாதத்தினை கண்ணியப்படுத்தும் முகமாக பாறுக் சிஹான் அவர்களின் சிந்தையில் உதித்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கான பொதுவான 'முஸ்லிம் மஜ்லிஸ்' என்ற எண்ணம் எம்.எம்.எம்.சுபாட் அவர்களின் தலைமையில் உதயமானது.

இதில் எப்.சிஹான் செயலாளராகவும் ஏ.ஆர ;எம்.முவப்பக் பிரதி தலைவராகவும் வை.எம்.சாதிகின் உதவி செயலாளராகவும் ஏ.எம்.ஓ.எம்.ஒஷால் பொருளாளராகவும் எஸ்.அப்துல் {ஹதா இதழாசிரியராகவும் எம்.ஏ.எப்.பர்சானா பெண்கள் பிரிவுக்குப் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டு ஏ.எல்.றஜீப் கான், ஏ.எல்.எஸ்.எம்.பிஸ்று, ஏ.எல்.எம்.சப்ராஸ், ஏ.டபிள்யூ.எம்.அக்ரம், ஏ.அப்சா, என்.எப்.சப்ரானா, எம்.பி.எப்.நிஸ்ரா, எம்.என்.எப்.சப்ரின் ஆகியோர் நிர்வாக சபை உருப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

2010ம் ஆண்டைய றமழான் பொறுப்புகள் இக்குழுவால் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.

பின்னர் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளில் ஏற்பட்ட வெற்றிடங்கள் வை.எம்.சாதிகீன் மற்றும் ஏ.டபிள்யூ.எம்.அக்ரம் ஆகியோரினால் நிரப்பட்டது. இந்த காலப்பகுதியில் 2010ஆம் ஆண்டு புதிய மாணவர்களின் வருகையோடு ஒன்றியத்தின் அங்கத்தவர் எண்ணிக்கை 65ஆக அதிகரித்தது. ஏனைய பீடங்களுக்கும் முஸ்லிம் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டமையினால் நிர்வாக சபை உறுப்பினர்கள் மீளமைக்கப்பட்டு ஏ.என்எம.சிபாஸ், ஏ.எம்.அர்ஸாட், எம்.எம்.றதீப், எம்.ரீ.எம்.இஜாஸ், எச்.எம்.றஜாஸ், எம்.எம்.{ஹமைத், ஏ.ஜி.எம்.மபாஸ், ஏ.எச்.எப்.ஹஸானா, எம்.எம்.எப். பர்ஸானா, ஏ.எச்.நுபா நத்ரின், எப்.ஜுமானா, எம்.வை.சில்மியா ஆகியோர் பீட பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.

2011ம் ஆண்டு றமழானுக்கு நெருங்கிய காலப்பகுதியில் புதிய நிர்வாக தெரிவிற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் புதிய நிர்வாக தெரிவினை அடுத்து வரும் பொதுக் கூட்டம் வரை ஒத்திவைத்து அதுவரை எச்.எம்.றஜாஸ் செயலாளராக செயற்பட முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிர்வாகம் கடுமையான நிதி நெருக்கடியினை எதிர் நோக்கியிருந்ததால் நிதி திரட்டல் வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன இதில் ஏ.என்.எம்.சிபாஸ், ஏ.எம்.அர்ஸாட் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியதாகும். இந்த றமழானில் இறைவனின் உதவியால் அனைத்து மாணவர்களுக்குமான ஸஹர், இப்தார் ஏற்பாடுகள் அனைத்து நாட்களும் இலவசமாக வழங்கப்பட்டதுடன் முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தைப் பல்கலைக்கழகத்தில் உத்தியோபூர்வமாகப் பதிவு செய்வதற்காக பெரும் பொருளாளராக அப்போது கணித புள்ளிவிபரவியல் துறை தலைவராக இருந்த பேராசிரியர் சிறி சற்குணராசா அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டதோடு காப்பாளராக உபவேந்தரை நியமிப்பதற்கான விண்னப்பமும் சமர்ப்பிக்கப்பட்டது எனினும் யாப்பினை காரணம் காட்டி அது நிராகரிக்கப்பட்டது.

2011-09-25 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற கூட்டம் ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்றுகூடுதலாகவும் அமைந்தது. இந்த கூட்டத்தில் ஒன்றியத்தின் புதிய தலைவராக எம்.எம்.றதீப் தெரிவு செய்யப்பட்டதோடு செயலாளராக எஸ்.அபுல் {ஹதா மற்றும் பிரதி தலைவராக என்.எம்.சர்ஜுன் உதவி செயலாளராக ஏ.ஜி.எம.மபாஸ்; இளம் பொருளாளராக ஏ.ஜே.எம்.கியாஸ் பெண்கள் பிரிவிக்கு பொறுப்பாக எம்.எப்.றிப்கா அவர்களும் அதன் செயலாளராக எம்.என்.எப்.சப்ரின் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதோடு நிர்வாகசபை உறுப்பினர்களாக அனைத்து பீடங்களையும் பிரதிநிதிப்படுத்தி எம்.ஏ.சஹ்னாஸ் ஆயிஷா, எம்.எம்.எம்.இபாம், ஏ.எச்.எப்.அஸ்மியா ஏ.சி.எம்.மிப்ராஸ், எம்.ஐ.எப்.இஸ்னத், ஏ.எச்.எம்.றிஸ்வான், எம்.என்.எப்.றிகாஸா, எம்.ரி.எம்.இஜாஸ், எம்.எச்.முனாஸா, கே.எம்.எம்.இர்பான், எம்.வை.சில்மியா, எச்.எம்.றஜாஸ், எம்.ஜே.எப்.ஜுமானா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக்குழுவினர் எதிர் வரும் மூன்று மாதங்களுக்குள் உத்தியோகபூர்வ பதிவுகளுக்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது.

புதிய நிர்வாகம் எம்.எம்.எம்.றதீப் தலைமையில் ஒன்றியத்தின் பதிவு வேலைகள் துரிதப்படுத்தி மீண்டுமோர் யாப்பினை தயார்படுத்தி மீண்டும் அனுமதிகள் பெறப்பட்டு மீண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.

இந்த காலப்பகுதியில் பல்கலைக்கழகம் நுழைந்த புதிய மாணவர்களுடன் அங்கத்தவர் எண்ணிக்கை 130ஐ தொட்டது. அத்துடன் மாணவர்கள் வருகை தந்த சில வாரங்களில் அவர்களுக்கான வரவேற்புபசார நிகழ்வு நடாத்தப்பட்டது. 
இக்காலப்பகுதியில் எடுத்த தீர்மானத்திற்கிணங்க யாப்பினை யாத்தலுக்கான குழு பேராசிரியர் வேல்நம்பி அவர்களை அணுகி அதற்கான வரன்முறைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் மஜ்லிஸை பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில், இதனை செயற்படுத்துவதில் பல சிரமங்களை எதிர்நோக்கினர், இதனை நிவரத்;திக்கும் வகையில் பிற பல்கலைக்கழகங்களில் செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் மஜ்லிஸ்களின் நடவடிக்கைகள் மற்றும் யாப்புகள் என்பவற்றை ஆராய்ந்து  அவற்றினைக் கொண்டு ஆலோசனை செய்து மஜ்லிஸீக்கான நடைமுறை ஒழுங்குகளை சீராக்கி கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மீண்டும் ஒரு புதிய யாப்பு மாணவ ஆலோசகரிடம் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டது. ஆனால் அது யாழ் பல்கலைக்கழகத்தின் ஒன்றியங்களின் பொதுவான யாப்பு அமைவுகளோடு இசையாதிருப்பதாகவும், எளிமைத்தன்மை பேணப்படவில்லை என்ற காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இது நிராகரிக்கப்பட்ட செய்தி சிறிது காலத்தின் பின்னரே அறிய வந்த நிலையில் தலைவர் தன்னால் முந்தைய பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட யாப்பிற்கான அனுமதியைப் பெற்று ஒன்றியத்தைப் பதிவு செய்தல் என்ற வாக்குறுதியினை நிறைவேற்ற தவறியமையால் தாமாக பதவியை இராஜினாமா செய்தார். அதே வேளை கல்வி சாரா ஊழியர்களினதும் விரிவுரையாளர்களினதும் வேலை நிறுத்த போராட்டங்களை பல்கலைக்கழகம் எதிர்நோக்கியிருந்த காரணத்தினால் ஒரே நாளில் பிரதி தலைவர் என்.எம்.சர்ஜீன், மற்றும் எச்.எம.றஜாஸ் ஆகியோரினால் புதிய யாப்பு வரையப்பட்டது.

குருகிய காலத்தில் அழைக்கப்பட்ட நிர்வாக சபையின் யாப்பிற்கான அனுமதியுடன் பிரதி தலைவரின் தலைமையில் அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு காப்பாளராக ஆங்கில மொழித்துறைத் தலைவர் கே.ராசகுமாரன் அவர்களை கொண்டு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு அடுத்த தினம் ஆரம்பமான வேலை நிறுத்தம் சுமார் 04 மாதங்களுக்கு மேல் நீடித்தது. இந்தக் காலப்பகுதியில் யாப்பிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட போதும் ஒரு சில சொல் மாற்றங்களுக்காக காத்து நின்றது.

மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீட மாணவர்கள் 04 மாத விடுமுறையில் இருந்தமையால் 2012ம் ஆண்டு றமழான் ஏற்பாடுகள் மருத்துவ பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போதும் இதற்கான நிதி திரட்டல் முயற்சியில் கலை, முகாமைத்துவ பீட மாணவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவு காணப்பட்டது.
நீண்ட காலத்தின் பின்னர் கூட்டப்பட்ட 2013ம் ஆண்டு புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கான கூட்டம்; இடம்பெற்றது. இதில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கலந்து கொண்டதோடு ஒன்றியத்தினால் நாட்காட்டி ஒன்றும் வெளியிடப்பட்டது. இப்புதிய நிர்வாக சபை என்.எம்.சர்ஜுன் தலைமையில் எம்.என்.எம்.உஸ்மான் செயலாளராகவும் பிரதித் தலைவராக எஸ்.அப்துல் {ஹதா வும் உதவி செயலாளராக எச்.எம்.றஜாஸ் இளம் பொருளாளராக எம்.ரி.எம்.இஜாஸ் அவர்களும் இதழாசிரியையாக எம்.எச்.றாபியா உம்மா அவர்களும் உதவி இதழாசிரியையாக எம்.ஏ.முனாஸா அவர்களும் ஒருங்கமைப்பாளராக ஏ.என.எம.அர்ஸாட் அவர்களும் பெண்கள் பிரிவுக்குப் பொறுப்பாக ஏ.எச்.நுபா நத்ரின்; அவர்களும் நிர்வாக சபை உறுப்பினர்களாக அனைத்து பீடங்களையும் பிரதிநிதிப்படுத்தி எஸ்.அஜ்மல் இம்தியாஸ், எம்.சமியா, எம்.எம்.ஸகீல், எம்.ஜே.எப்.ஜீமானா, எம்.ஏ.எஸ்.ஆயிஸா, ஏ.என்.எம்.சிபாஸ், எம்.என்.எப். பௌஸானா, எம்.எச்.எம்.றியாஸ், எச்.எம்.எம்.ஹலீம், ஏ.எம்.ஷம்றத் பேஹம், ஏ.எச்.எம்.றிஸ்வான், ஏ.ஆர்.எம்.மிப்லான், ஏ.எஸ்றமீஸா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகசபை முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினை பதிவு செய்யும் வேலைகளை உடனடியாக ஆரம்பித்தது 2013.06.13 அன்று எமது ஒன்றியம் பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கான பொதுவான தொழுகை அறை ஒன்றை பெற்றுக்கொள்ளும் முயற்சியிலும் நிர்வாகசபை ஈடுபட்டது.

இதில் என்.எம்.சர்ஜுன், ஏ.எச்.எம்.றிஸ்வான், எம்.ரி.எம்.இஜாஸ், ஏ.என்.எம்.சிபாஸ், எச்.எம்.றஜாஸ் ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இறைவன் உதவியால் மாணவர்களின் முயற்சிக்கு வெற்றி கிட்டியது. சமூக நலச்சேவைகள் கிளையின் உதவிப் பதிவாளர், பிரதிப் பிரதம ஓழுக்காற்று அதிகாரி ஆகியோரின் உதவியாலும் தொழுகை அறை வழங்கப்பட்டு அதற்கான திறப்பு விழா ஏற்பாடும் செய்யப்பட்டது. 

இதற்கு பிரதம விருந்தினராக பதில் துனைவேந்தராக இருந்த அப்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் கே.கந்தசாமி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா (பெரும் பொருளாளர், முஸ்லிம் மஜ்லிஸ்), வை.ஜெயகுமார் (பிரதி பதிவாளர், நலச் சேவைகள, பேராசிரியர். பி.புஸ்பரட்ணம். (சிரேஸ்ட மாணவ ஆலோசகர்), ஐ.கே.சந்திரசேகரம் (பிரதி மாணவ ஆலோசகர்), கே.ராசகுமாரன் (காப்பாளர், முஸ்லிம் மஜ்லிஸ்) ஆகியோருடன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வு இடம்பெற்று மறுதினமே யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
2013ம் ஆண்டு புதிய மாணவர்களின் வருகையோடு அங்கத்தவர் எண்ணிக்கை 252ஐ தாண்டியது.

இதன் பின்னரான பொதுக்கூட்டம் பல்கலைக்கழகத்திலேயே கூட்டப்பட்டதுடன் இக்கூட்டத்தில் றமழான் தொடர்பாக கலந்துறையாடப்பட்டதுடன் என்.எம்.நாஸிர் அலி, ஏ.சி.எம்.அர்கம், ஏ.இல்யாஸ் ஆகியோரை உள்ளடக்கி தஃவா குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த றமழானில் பல இப்தார் நிகழ்வுகள் இடம்பெற்ற போதும் பல்கலைக்கழகத்தில் பொது இப்தார் நிகழ்வு இடம்பெற்றது இம்முறையே முதல் தடைவையாக இருந்தது. இது ஏனைய சமூக மாணவர்களுடன் நல்லுறவை வலப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏனைய சமூக மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் ஒன்றியம் தனிமனித உருவாக்கத்தில் அதிகம் ஆர்வம் காட்டியதுடன் பல மார்க்க சொற்பொழிவு நிகழ்வுகளை ஆண், பெண் மாணவர்களுக்கு தனித்தனியே ஏற்பாடு செய்தது. ஓன்றியத்தின் பிட்பட்ட பகுதியில் பெண்கள் பிரிவிற்கு பொறுப்பாக எம்.ஏ.முனாஸா தெரிவு செய்யப்பட்டதுடன் பெண்களுக்கான வாராந்த நிகழ்வுகள் பல்கலைக்கழக தொழுகை அறையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.இன்று புதிய மாணவர்களுடன் சுமார் 350 அங்கத்தவர்களை கொண்ட எமது ஒன்றியத்தை புதிய நிர்வாகம் பெறுப்பேற்கின்றது.

இதன் தொடர்ச்சியாக தான் 30 வருடங்களிற்கு பின் இன்கிலாப் சஞ்சிகை யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் ஏற்பாட்டில்  கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வைத்து  வெளியிடப்பட்டது.

இதன் போது துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூலினை வெளியீட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன்  கலைப்பீட பீடாதிபதி வி.பி சிவநாதன் வணிக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் ரி.வேல்நம்பி மற்றும் விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டதுடன் தற்போதைய முஸ்லீம் மஜ்லீஸ் தலைவர் எம்.ஹலீம்,உப தலைவர் என்.எம் அர்சாத்,செயலாளர் எஸ்.எம் ஜிப்ரான்.உப செயலாளர் என்.எம் நிப்ராஸ்,சஞ்சிகை குழுவினர் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம்  முஸ்லிம் சமூகத்தின் மிகப்பாரிய சக்தியாக அடையாளப்படுத்தப்படும் மாணவ அமைப்புக்களில்; தொன்மையானதாகும். பல்வேறு புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்து வரலாற்று பெறுமை மிக்க மாணவர் சக்கியை வலுப்படுத்தும் இவ்வமைப்பு தொடர்ச்சியாக  இம்முயற்சியில் ஈடுபட  பல்கலைக்கழக முஸ்லிம் சகோதர சகோதரிகள் பீட வேற்றுமைகளை மறந்து ஒத்துழைக்க  முன்வரவேண்டும் என்பதே அனைவரதும் அவா.















Post a Comment

0 Comments