Subscribe Us

header ads

ஜோன் கெரிக்கு இலங்கையில் அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! 200 அமெரிக்கப் படையினர் இலங்கையில்!!

 
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை விடவும்,  அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கு இலங்கையில் அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்க நாட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விடவும், அதிகளவான பாதுகாப்பு ஜோன் கெரிக்கு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜோன் கெரியின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 200 அமெரிக்கப் படையினரும், வெடிபொருட்களை இனம் காணும் 40 பயிற்றப்பட்ட மோப்ப நாய்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோன் கெரியின் இலங்கை விஜயம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் நோக்கில் 40க்கும் மேற்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

Post a Comment

0 Comments