Subscribe Us

header ads

'பிரான்ஸ்' நாட்டில் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரிக்க வேண்டிய கட்டாயம்


-முஸ்லிம் கவுன்சில் 


இஸ்லாமிய நூல்களுக்கும் கடும் பஞ்சம் : 1 வருடத்தில் 3 மடங்கு நூல்கள் விற்று தீர்ந்தன !!

பிரான்ஸ் அரசின் கணக்குப்படி, அந்நாட்டில் 22,000 பள்ளிவாசல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிவாசல்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசல் காரணமாக தற்போதுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் முஸ்லிம் கவுன்சில் தலைவர் 'தலீல் அபூபக்கர்' கூறுகையில் :

பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை இரு மடங்கு உயர்த்தும் திட்டம், உடனடியாக துவக்கப்பட்டு 2 வருடங்களுக்குள் முடிக்கப்படவேண்டும் என்றார்.

சமீப காலமாக, மக்கள் சாரை சாரையாக இஸ்லாத்தை ஏற்று வருவதாகவும் பள்ளிவாசல்களில் கூட்டம் நிரம்பி வழிவதாலும் பள்ளிகளின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்த்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது, என்றார் அபூபக்கர்.

கடந்த ஓராண்டில் மட்டும் இஸ்லாமிய நூல்களின் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக 'புத்தகப் பதிப்பின் நேஷனல் யூனியன்' அறிக்கையை மேற்கோள்காட்டி கூறிய அவர், இஸ்லாமிய நூல்களின் தட்டுப்பாட்டை போக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பிரான்ஸ் நாட்டு மக்கள் கணக்கெடுப்பின் படி, அங்கு 60, லட்சம் முஸ்லிம்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், உண்மை நிலை வேறாக உள்ளது.

Post a Comment

0 Comments