ஆறு மில்லியன் மக்கள் என் மீது நம்பிக்கை
வைத்து என்னை வெற்றி பெறச் செய்தது கடந்த அரசில் நிலவிய குடும்ப ஆட்சி,
ஊழல் துஷ்பிரயோகங்களை இல்லாதொழித்து ஜனநாயக சூழலுக்கமைவான அரசியலை
உருவாக்குவதற்காகவாகும். எனவே அந்த வாக்குறுதியை நிறைவேற்றி அவ்வாறான
சூழ்நிலையை உருவாக்கித் தருவதே எனது கடமையும் என்பதில் நான் தெளிவாக
இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, தனது குடும்பத்தில் இருந்து
யாரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனவும் தான் மக்களுக்கு வழங்கிய
வாக்குறுதிகளைக் காப்பாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தனது வாரிசுகள்
எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் வெல்லக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்ற
போதும் தனது வாரிசுகளோ அல்லது தனது சகோதரர்களோ கூட எதிர்வரும் தேர்தலில்
போட்டியிடப் போவதில்லையெனவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்
அடிப்படையிலான சிறந்த அரசையும் அரசியல் சூழ்நிலையையும் உருவாக்குவதே தனது
செயற்பாட்டின் அடிப்படையெனவும் அண்மையில் பொலன்நறுவயில்
வைத்துதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments