மூத்த எழுத்தாளரும், பண்நூலாசிரியருமான கலாபூஷணம். M.H.M. அப்துல் லதீப் அவர்கள் எழுதிய ஐந்து நூல்களின் வெளியீட்டு வைபவம் நேற்று (2015.03.14) முஸ்லிம் கலாசார மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அவர் எழுதிய உண்மையான உலக அழிவு, “நாற்பது” பற்றிய தகவல்கள், முஹம்மத் (ஸல்) அற்புதக் கவியாரம், அல் அக்ஸா அழைக்கிறது மற்றும் புனித பூமியில் பதிந்த சுவடுகள் ஆகிய நூல்களே இன்று வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ், முன்னால் வடமேல் மாகன சபை அமைச்சர் எம்.எச்.எம். நவவி, வடமேல் மாகன சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.












0 Comments