ஈராக், சிரியா நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். வாதிகள் ஓரின சேர்க்கையாளர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் சிரியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை கொலை செய்தனர். இப்போது மேலும் ஒருவரை கொன்றுள்ளனர். ஐ.எஸ். வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா நகரில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட ஒருவரை அடுக்குமாடி மாடியில் நிறுத்தி அங்கிருந்து அவரை கீழே தள்ளிவிட்டனர். இதில் உடல் சிதறி அவர் உயிரிழந்தார்.
இந்த கொலைக்காட்சியை காண்பதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் அங்கு கூடினார்கள். அவர்கள் முன்னிலையில் மாடியில் இருந்து அவரை தள்ளிவிட்டனர். அவருடைய இரு கண்களையும் துணியால் மறைத்து கட்டியிருந்தனர். மேலும் இரு கைகளும் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தன.
0 Comments