Subscribe Us

header ads

மாயமான மலேசிய விமானம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் - ஆஸ்திரேலியா பிரதமர்


மாயமான மலேசிய விமானம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான எம்ஹெச்370 விமானத்தில் 239 பேர் பயணித்தனர். இந்த விமானம் பயண கட்டுப்பாட்டு அறை தொடர்பில் இருந்து விலகி மாயமானது. இதனைத்தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் விமானம் கிடைக்கவில்லை. இதனையடுத்து அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்றும் அதில் இருந்த அனைவரும் இறந்திருககலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரம் விமானத்தை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்ற்று வந்தது. ஆனாலும் தேடுதல் வேட்டையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மாயமான மலேசிய விமானம் MH370 விபத்துக்குள்ளாகிவிட்டது என்றும், அதில் பயணம் செய்த அனைவ்ரும் உயிரிழந்தனர் என்றும் மலேசிய அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. ஆனாலும் விமானம் குறித்த சர்ச்சைகள் நின்றபாடில்லை.

கடந்த சில தினக்களுக்கு முன் தற்போது மாயமான மலேசிய விமானம் வேண்டுமென்றே அண்டார்டிக்கா நோக்கி சென்றது என்று விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்ததாக பிரிட்டனை சேர்ந்த தி மிரர் எனும் நாளிதழ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. விமானம் மாயமாகி ஓராண்டாகி விட்ட நிலையிலும் இது குறித்து உறுதியாக தெரியவரவில்லை

இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய அவர் பேசுகையில், மாயமான விமானத்தை தேடுவதில் எங்களுடைய எதிர்பார்ப்பு வெற்றிபெறும் என்று நம்புகிறோம். எங்களால் முடிந்தவரையில் விமானம் மாயமான பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Post a Comment

0 Comments