Subscribe Us

header ads

பேஸ்புக் நிறுவனம் ஸ்டேடஸ் மெனுவில் இருந்து 'பீலிங் ஃபாட்' ('feeling fat') நீக்கியது.


பேஸ்புக் நிறுவனம், அதன் ஸ்டேடஸ் மெனுவில் இருந்து 'பீலிங் ஃபாட்' ('feeling fat') உணர்ச்சித்திரத்தை நீக்கியது.

சாப்பிடுவதில் குறைபாடு ஏற்பட்டதால் உடல் பருமன் அதிகரித்த மக்கள் இது உணர்வற்றதாக உள்ளது என்று ஆர்வலர்கள் ஆன்லைனில் புகார் அளித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர், அதனால் பேஸ்புக் நிறுவனம் பீலிங் ஃபாட் உணர்ச்சித்திரத்தை நீக்கியது. 

சிறுமிகள் மற்றும் பெண்களின் உடல் பருமனை கேலி செய்பவர்களை எதிர்த்துப் போராடும் வகையில், கேதரின் வெயின்கார்ட்டனும் மற்றும் என்டேஞ்சர்டு பாடீஸ் குழுவின் மூலம் அமைக்கப்பட்ட change.org இல் 16,000க்கும் மேற்பட்ட மக்கள் பீலிங் ஃபாட் ஈமோஜிக்கு எதிராக ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

குழு தொடர்புடைய ஆர்வலர்கள், கடந்த மாதம் தொடங்கப்பட்ட Change.org இல் பிரச்சாரத்தில் வந்த பல்வேறு மனுக்களை தேசிய உணவு சீர்கேடுகள் விழிப்புணர்வு வாரத்தில் இணைத்தனர்.   

இந்த ஈமோஜி, உடல் பருமன் அதிகம் உடையவர்களை கேலி செய்யும் வகையிலும், அவர்களது மனதை புன்படுத்தும் வகையில் உள்ளதாக பிரச்சாரத்தின் முடிவில் அறிந்தோம் என்று பேஸ்புக் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதனால் பேஸ்புக் விருப்பங்கள் பட்டியலில் இருந்து பீலிங் ஃபாட் ஈமோஜியை நீக்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து செவ்வாய்கிழமை அன்று பேஸ்புக் ஸ்டேடஸ் மெனுவில் இருந்து பீலிங் ஃபாட் உணர்ச்சித்திரம் நீக்கப்பட்டது. 

Post a Comment

0 Comments