Subscribe Us

header ads

அரைநிர்வாணமாய் போப்பை வரவேற்கும் கன்னியாஸ்திரி! வெடித்தது சர்ச்சை


போப் ஆண்டவரை வரவேற்கும் கன்னியாஸ்திரியின் ஆபாச பட விளம்பர பலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போப் பிரான்சிஸின் வருகையை முன்னிட்டு அடுத்தவாரம் இத்தாலியில் உள்ள நேபிள்ஸ்(Naples) நகரில் அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக வரவேற்பு வளைவுகள் மற்றும் பேனர்கள், கட்– அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றுடன் கன்னியாஸ்திரி ஒருவரது ஆபாச பட விளம்பர பலகையும் இடம் பெற்றுள்ளது.

சுமார் 20 அடி நீளமும், 30 அடி அகலத்துடனும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பலகையில், ஜீன்ஸ் பேண்ட் அணிந்த கன்னியாஸ்திரி ஒருவர் மேலாடை இன்றி போப் ஆண்டவரை வாழ்த்தி வரவேற்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விளம்பர பலகை நகரின் மைய பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Post a Comment

0 Comments