Subscribe Us

header ads

இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட காந்தியின் சிலை

லண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் காந்தியின் சிலையை இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று திறந்து வைத்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த மகாத்மா காந்திக்கு இங்கிலாந்து தலைநகரான லண்டனில் சுமார் ரூ.10 கோடி செலவில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை லண்டன் வாழ் இந்திய தொழில் அதிபர் மேக்நாத் தேசாய் உள்பட பலர் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை, 1931–ம் ஆண்டு அவர் லண்டனுக்கு சென்றபோது 10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் முன்புறம் நின்றவாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காந்தியின் முழு உருவ தோற்றம் கொண்ட சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.

டேவிட் கேமரூனுடன் இணைந்து இந்திய அரசின் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், 9 அடி உயரம் கொண்ட இந்த சிலையை இன்று பாராளுமன்ற சதுக்கத்தில் கூட்டாக திறந்துவைத்துள்ளனர்.

இந்த சிலை திறப்பு விழாவில், இந்தி திரையுலகத்தின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் இங்கிலாந்தில் வாழும் பல இந்திய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், வின்ஸ்ட்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா போன்ற உலகத் தலைவர்களின் சிலைகள் இடம்பெற்றிருக்கும் இந்த பாராளுமன்ற சதுக்கத்தில் முதன்முதலாக ஒரு இந்திய தலைவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments