Subscribe Us

header ads

ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரிக் சக்தியில் இயங்கும் சுற்றுலா வாகனம் விரையில் துபாயில் அறிமுகம்!



துபாயில் சுற்றுசூழலை பாதிக்காத வகையில் எரிபொருள் உபயோகிக்காமல் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் வாகனம் துபாயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் துபாய் டவுன் பகுதியில் நடைபெற்றது. இவ்வாகனம் செயல்பட துவங்கியவுடன் முதல் கட்டமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியும் பகுதியான‌ துபாய் டவுன் டவுன் பகுதியில் உள்ள துபாய் மால், துபாய் நீரூற்று, சூக் அல் பஹர் உள்ளிட்ட 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும்.

மேலும் இரட்டை அடுக்கு வாகனமாக அமைக்கப்பட்டுள்ள இந்த டிராலி வாகனத்தில் ஒரு அடுக்கில் 74 பயணிகள் வரை அமர்ந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் ஹைட்ரஜன் டிராலி வாகனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என என இமார் பிராப்பர்டிஸ் நிர்வாக இயக்குநர் அஹமது அல் மத்ரூசி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

-Dinakaran-

Post a Comment

0 Comments