-CM Media-
காத்தான் குடி நகரசபையின் வருமானம் தொடர்பாக கடந்த காலங்களில் இருந்து வரும் பிரச்சனைகாரணமாக வரி அறவீட்டு முறை அமுலாக்கப்பட்டு வருகின்றது. அதுசம்மந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினைச்சந்தித்து வரி அறவீட்டின் காரணமாக ஏற்படும் பிரச்சனை சம்மந்தமாக காத்தான் குடி நகரசபையின் நகர பிதா எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் நகரசபை செயலாளர் அடங்கிய குழுவினர் நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சரை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் சந்தித்து அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பிரத்தியேகச்செயலாளர், இணைப்புச்செயலாளர், மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிபிடத்தக்கது.






0 Comments