Subscribe Us

header ads

முதல் முஸ்லீம் பெண் சப் கலெக்டர் டாக்டர் அதீலா அப்துல்லா!!!!



கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம்,திரூரில் முதல் பெண் சப்கலக்டர் அதீலா அப்துல்லா. அதீலாவின் கணவர் டாக்டர்.ரபீஹ், குழந்தைகள் ஏரா ரபீஹ், ஹைஸான் ரபீஹ்.


கோழிக்கோடு குட்டியாடியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.பெற்றோர் அப்துல்லா,பீவிபாத்திமா.

பெரிந்தல்மண்ணா எம்.ஈ.எஸ் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ் முடித்த அதீலா,பின் மிகச்சிறிய கால இடைவெளியில் தன் லட்சியமான ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி 2012 ல் தேர்ச்சி பெற்றார். 2013 ல் கன்னூரில் டெபுடி கலக்டராக பணியை தொடங்கிய சகோதரி அதீலா 2015 பிப்ரவரியில் முதல் பெண் சப்கலக்டராக திரூரில் பொறுப்பேற்றிருக்கிறார்.

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து தன் விடாமுயற்சியினால் உயர் பதவி அடைந்திருக்கும் சகோதரி அதீலா அப்துல்லாவின் பணி சிறக்க வாழ்த்துவோம்.. வாழ்த்துக்கள் 

-VK-

Post a Comment

0 Comments