Subscribe Us

header ads

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ! இது கரைத்தீவு மக்களுக்கு மட்டுமல்ல...


-Mohamed Muhshi-
கரைத்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிதாக கட்டிடங்களைக் கட்டுவதற்கும், மாணவர்களின் எதிர்காலத் தேவைகளுக்காகவும் பழைய மருந்தகம் அமைந்துள்ள காணியை பெற்றுக் கொடுக்க முன்னால் பிரதேச சபைத் தலைவர் அலஹாஜ் ஆர்.என். அசனா மரைக்கார் மிகவும் விரும்பினார். அது போல கிராமத்தின் மத்தியில் கரைத்தீவு மக்களுக்காக மருத்துவத் தேவைகள் கிடைக்க வேண்டும் என்று அவர் பெரிது விரும்பினார். அதற்காக தனது சொந்தப் பணத்தில் வாங்கிய காணியை தனது பெற்றோர் நினைவாக சதகத்துல் ஜாரியாவாக அன்பளிப்பு செய்தார். 

மீள்குடியேற்ற அமைச்சராக அப்போது இருந்த ரிஷாத் பதியுதீன் மூலம் 20 இலட்சம் ரூபா செலவில் கட்டிடம் ஒன்று கட்ட நடவடிக்கை எடுத்தார். தனது செலவில் பல்வேறு உள்ளக நிர்மாணப் பணிகளை மேற்கொண்டார். வைத்தியர் விடுதி ஒன்றையும் நிறுவினார். நீர்த் தாங்கி ஒன்று கூட சமூக சேவை நிறுவனம் மூலம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது.

இருந்தாலும் அவரது இந்த முயற்சி திட்டமிட்ட அடிப்படையில் குழப்பபட்டது. அவரும் அலையாத இடங்கள் இல்லை. ஏறாத படிகள் இல்லை. சந்திக்காத அரசியல் பிரதிநிதிகள் இல்லை. சென்று பார்க்காத அதிகாரிகள் இல்லை. அவருடன் இந்தப் பணிக்காக பல்வேறு இடங்களுக்கு நானும் சென்றுள்ளேன். அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும், பிரயாசையும் சொல்லுந்தரமன்று. மாகாண சபை,பாராளுமன்றம் என்று அலைந்திருக்கிறோம். ஆனால் அவரது முயற்சி இன்றும் கூட ஓயவில்லை. அல்லாஹ் அவற்றை அறிவான். இதற்காக அவர் அதிகளவில் செலவும் செய்துள்ளார். அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

இந்நிலையில் இதனை திறப்பதற்கும், கிராமிய வைத்தியசாலை என்ற அந்தஸ்தை பெற்றுக் கொள்வதற்கும் கரைத்தீவு மக்களை நேசிக்கும் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சித்தால் மிகவும் வரவேற்கத்தக்கது. அதற்காக எங்கு செல்ல வேண்டியிருப்பினும் நானும் இணைந்து கொள்ள முடியும் இன்ஷா அல்லாஹ்.

மேலும் தற்போது வடமேல் மாகாண சுகாதரப் பணிப்பாளராக இருக்கும் Dr. என்.பரீத் அவர்களது உதவி பெறப்படுவது மிகவும் அவசியாமாகும். அவருக்கு அனைத்து விடயங்களும் தெரியும். பாடசாலைக்கு காணியும் பெற்றுக் கொள்ள வழி பிறக்கும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

Post a Comment

0 Comments