Subscribe Us

header ads

ஒரே ஒரு கொலைசெய்ய, கடவுள் அனுமதித்தால்...


ஒரே ஒரு கொலை செய்ய எனக்கு கடவுள் அனுமதி கொடுத்தால், நிர்பயாவைக் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு பேட்டியளித்திருக்கும் அந்த குற்றவாளியை நானே கொல்வேன் என்று நடிகை டாப்சி ஆவேசமாக தெரிவித்துள்ளார்

தில்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா குறித்த ஆவணப்படம் ஒன்றிற்காக லண்டனை சேர்ந்த பி.பி.சி.4 குழுவினர் சிறையில் உள்ள முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்தனர். அப்போது மாணவி பலாத்காரம் செய்தபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று பேட்டி அளித்து இருந்தான். இந்த பேட்டி பெரும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து ஆவணப் படத்தை ஒளிபரப்ப இந்தியா தடை விதித்திருந்த நிலையில், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிபிசி தொலைக்காட்சியில் நேற்று இரவு அந்த படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நடிகை டாப்சி கூறுகையில், குற்றவாளி முகேஷ்சிங் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. கடவுள் என்னை ஒரே ஒரு கொலை செய்ய அனுமதித்தால் நானே அந்த பலாத்கார குற்றவாளியை கொலை செய்து என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன். குற்றம் செய்தவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகத்தான் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் முகேஷ் சிங் போன்றவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள் உயிரோடு இருக்கவே கூடாது என்று கோபமாக கூறினார்.

Post a Comment

0 Comments