Subscribe Us

header ads

நுரைச்சோலை நிலக்கரி விநியோக விவகாரம்: சம்பிக்கவிடம் விசாரணை


கற்பிட்டி, நுரைச்சேலை அனல் மின் நிலைய நிலக்கரி விநியோகம் குறித்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 582 மில்லியன் ரூபா ஊழல் மோசடி தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

இரகசிய பொலிஸார் இன்றைய தினம் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி கொடுக்கல், வாங்கல்கள் அமைச்சரவையின் அங்கீகாரத்தினுடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த ஊழல் மோசடி தொடர்பில் அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பேர்டினண்ட்ஸிடமிருந்தும் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும்,
அவர் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதால் வாக்குமூலம் பெறுவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments