எமது நாட்டு பெண்களுக்கு முறையான கௌரவத்தையும் அவர்களுக்கு நியாயமான இடத்தை வழங்கும் பெண்களுக்கு நல்லதொரு நாட்டை உருவாக்கும் நாளைய தினத்துக்காக பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமூகமாற்றம் ஏற்படும் இந்த நவீன யுகத்தில் பெண்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள பெண்களுக்கு கிடைக்க வேண்டிய முறையான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டும் எமது கலாசார பின்னணியுடன் மனித குலத்துக்கு பெண்கள் வழங்கும் பங்களிப்பை நாம் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். பெண்களுக்கு பிறப்பிலேயே உரித்தான தாய்மைக் குணம் மென்மைத்தன்மை காருண்யம் மற்றும் தயாள குணம் போன்ற இயல்புகள் மூலம் எமது சமூகத்தின் செயற்பாட்டுக்கும் முன்னோக்கிச் செல்வதற்கும் கிடைக்கும் பங்களிப்பு தொடர்பாக சீர்தூக்கிப் பார்க்க இது போன்ற தினம் முக்கியமானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


0 Comments