Subscribe Us

header ads

அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்: ஆரம்பமே தடுமாற்றம்


உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகிறது. அவுஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்துள்ளனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. நியூசிலாந்தின் நேப்பியரில் நடைபெறும் 31ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் (ஏ பிரிவு) அணிகள் மோதி வருகிறது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறும் 32 ஆவது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா–இலங்கை (ஏ பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.  மைக்கல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை தோற்கடித்து இருந்தது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. நியூசிலாந்திடம் தோல்வி கண்டது.
மெத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டாலும், அடுத்த ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி விசுவரூபம் எடுத்துள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கால் இறுதியை உறுதி செய்ய முடியும். 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகிறது. அவுஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்  பிஞ்ச் 24 ஓட்டங்களுடனும், வோர்னர் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்கள். அவுஸ்திரேலியா 11.3 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை எடுத்து விளையாடி வருகிறது. சுமித் 55 ஓட்டங்களுடனும், கிளார்க் 45 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர். 

Post a Comment

0 Comments