Subscribe Us

header ads

பாலமுனைக் கிராமத்தைச் சேர்ந்த கட்டாரில் தொழில் பரிபவர்களின் சமூக நல அமைப்பான அல் மீஸான் நலன்புரி ஒன்றியத்தினால் பள்ளிவாயல் ஒன்றுக்கும் புதிதாக இஸ்லாத்தை தழுவிய ஒருவருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பி. முஹாஜிரீன்


பாலமுனைக் கிராமத்தைச் சேர்ந்த கட்டாரில் தொழில் பரிபவர்களின் சமூக நல அமைப்பான அல் மீஸான் நலன்புரி ஒன்றியத்தினால் பள்ளிவாயல் ஒன்றுக்கும் புதிதாக இஸ்லாத்தை தழுவிய ஒருவருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பாலமுனை பாத்திமா பள்ளிவாயலில் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றது. ஒன்றியத்தின் உப தலைவர் ஏ.எல். உவைஸ் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் பிரதிநிதிகளான ஏ.ஆர்.ஏ சுக்கூர், ஏ.பி. இல்யாஸ் மற்றும் ஜமாஅதே இஸலாமி கிளையின் பாலமுனை மன்றத்தின் செயலாளர் எஸ். ஆப்தீன், உறுப்பினர்களான எஸ்.ரி. றகுமதுல்லா, ஏ. தபறானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலமுனை பாத்திமா பள்ளிவாயலுக்கு மாதாந்தம் ரூபா ஐயாயிரம் வீதம் 10 மாதங்களுக்கு நிதி அன்பளிப்புச் செய்யும் திட்டத்தின் கீழ் அதன் முதற்கட்டக் கொடுப்பனவை ஜமாஅதே இஸலாமி கிளையின் பாலமுனை மன்றத்தின் தலைவர், உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.எம். அபுல்ஹஸனிடம் அல் மீஸான் அமைப்பின் உபதலைவர் ஏ.எல். உவைஸ் கையளித்தார்.

மேலும், கடந்த பல வருடங்களுக்கு முன்னர் புதிதாக இஸ்லாத்தை தழுவிய பெண் ஒருவருக்கு, சொந்தமாக வீடு கட்டுவதற்கான காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக உதவி செய்யும் வகையில் ரூபா ஒரு இலட்சம் நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கட்டாரில் தொழில் புரியும் பாலமுனையைச் சேர்ந்த நபர்களின் முயற்சியினால் அல் மீஸான் நலன்புரி அமைப்பினூடாக அவர்களது சொந்த நிதியிலிருந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு நிதி சேகரித்து அவ்வப்போது தொடர்ச்சியாக உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments