ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமான எம். ரி ஹஸன் அலி அவர்கள் சுகாதார ராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பின்னர் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் விஜயம் செய்தார். அங்குள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்குச் சென்று அங்கு நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வள பற்றாக்குறை தொடர்பில் அவர் கேட்டறிந்து அவற்றுக்கனான தீர்வுகள் தொடர்பிலும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இது நல்ல விடயம்.
ஆனால், மத்திய அரசின் சுகாதார ராஜாங்க அமைச்சர் ஹஸன் அலியுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான மன்சூர் எத்தனை வைத்தியசாலைகளுக்குச் சென்றார் என்பதே இன்று எழுந்துள்ள கேள்வி இவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லவா?
கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமன விவகாரம் சூடு பிடித்துக் காணப்பட்டபோது கட்சியின் செயலாளர் நாயகமும் சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரீ ஹஸன் அலி அவர்கள்
அந்தப் பதவிக்கு மன்சூரின் பெயரை சிபார்சு செய்வதிலோ அல்லது அவரது பெயரை குறித்துரைப்பதிலோ ஆர்வம் காட்டவில் என்பதற்காக மன்சூர் இன்று இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று யாராவது கூறினால் அந்தக் கருத்துக்கு நான் பொறுப்பாளியல்ல…
அதேபோன்று மன்சூர் தன்னுடன் வருவதனை மத்திய அரசின் சுகாதார ராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி விருப்பம் காட்டவில்லை. அதனலலெ அவரை அழைக்கவில்லை என்று எவரேனும் கூறினால் அந்தக் கருத்துக்கும் ஐயையோ நான் பொறுப்பே அல்ல..
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


0 Comments