Subscribe Us

header ads

ஐ.ம.சு.முன்னணி புதிய பயணத்திற்கு தயாராகின்றது: டிலான் பெரேரா


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கியதன் மூலம் எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான புதிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளின் விருப்பத்திற்கேற்பவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

மேலும் எதிர்வரும் பொது தேர்தலை வெற்றி கொள்வதற்கான நோக்கத்துடனே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments