சிலி நாட்டை சேர்ந்த சிறுமி வாலென்டினா மவுரேய்ரா (14). இவள் ‘சிஸ்டிக்
பைபிரோசிஸ்’ என்னும் மரபணு நோயினால் கடும் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால்
அவளது நுரையீரல் உள்ளிட்ட மற்ற உடல் உறுப்புகள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளன. நோயின் கடுமையை குறைக்க அவளால் உரிய சிகிச்சை பெற
முடியவில்லை.
எனவே, ஆன்லைனில் (இணைய தளத்தில்) தனது வீடியோவை
வெளியிட்டாள். அதில், சிலி அதிபர் மிச்செலி பாசெலெட்டுக்கு ஒரு வேண்டுகோள்
விடுத்து இருந்தாள்.
‘‘எனது தம்பி இதே நோயினால் தனது 6 வயதில்
உயிரிழந்தான். அதே நோய் தற்போது என்னையும் தாக்கியுள்ளது. நோயின்
தாக்கத்தால் கடும் அவதியுறும் நான் உயிரை விட அதிபர் அனுமதி வழங்க
வேண்டும்’’ என கோரி இருந்தாள். அது சிலி நாட்டு மக்கள் மத்தியில்
அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சிலி நாட்டு சட்டத்தில்
அது போன்று உயிரை விட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம்
பொதுமக்களிடையே விவாத பொருளாக மாறியது. இதற்கிடையே அதிபர் மிச்செலி
பாசெலெட் ஒருநாள் திடீரென சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு வந்து அவளை
பார்த்தார்.
நோயினால் அவதியுறும் அவளுக்கு ஆறுதல் கூறிய அவர் சிறுமி
உயிரை விட அனுமதிக்க முடியாது என்றார். மேலும் அவளது சிகிச்சைக்கான செலவை
அரசே ஏற்கும் என கூறி அதற்காக உத்தரவும் பிறப்பித்தார்.


0 Comments