உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று உடலை வலுப்படுத்துபவர்கள் புரோட்டீன்
சத்து நிறைந்த மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனால், மேலை நாடுகளில் உள்ள
ஆணழகர்கள் தங்கள் உடல் எடையை கூட்டி வலுப்பெற தாய்ப்பால் குடிக்கின்றனர்.
அதற்காக
ஆன்லைனில் (இணைய தளத்தில்) தாய்ப்பால் விற்பனை நடக்கிறது. ஒரு அவுன்ஸ்
தாய்ப்பால் விலை 10USD என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அதிகமாக
இருந்தாலும் அதை வாங்கி ஆணழகர்கள் பருகுகின்றனர்.
பசும் பாலைவிட
தாய்ப்பாலில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. இதனால் அவர்களின் உடல்
வலுப்பெற்று தசைகள் உருண்டு திரண்டு வரும் என நம்புகின்றனர்.
இத்தகைய
நடவடிக்கையை உடற்கூறு நிபுணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உடல் வலுவுக்கு
தாய்ப்பால் மட்டுமே ஆதாரம் அல்ல. இருந்தும் மேலை நாடுகளில் தற்போது இது
போன்ற நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.


0 Comments