ஹெரோயினை தம்வசம் வைத்துக் கொண்டிருந்த ஐவரைக் கைது செய்துள்ளதாக வென்னப்புவ காவற்துறையினர் தெரிவித்தனர்.
நேற்றிரவு வென்னப்புவ நகரில் வைத்தே சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடமிருந்து தலா 20 மில்லி கிராம் எடை கொண்ட ஹெரோயின் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்கள் வென்னப்புவ உல்ஹிட்டியாவ, மத்திய நைனாமடம் மற்றும் மாரவில் ஹொரகொல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களிடமிருந்து தலா 15 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயினை மீட்டுள்ளதாகப் காவற்துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் மாரவில் கட்டுநேரி மற்றும் கொஸ்வாடி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அதிகளவில் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மாரவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள வென்னப்புவ காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments