Subscribe Us

header ads

மூதூரில் வாகன விபத்து ஏழுபேர் வைத்தியசாலையில் (படங்கள் இணைப்பு)


மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
கல்முனையிலிருந்து திருகோணமலைக்குப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று வேளாண்மை வெட்டும் இயந்திரத்தை ஏற்றி வந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இதனால் உழவு இயந்திரம், வேளாண்மை வெட்டும் இயந்திரம், பேரூந்து என்பன பலத்த சேதத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
 
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை ஏ15 பிரதான வீதி மல்லிகைத்தீவு சந்தியில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 
 
விபத்தின் போது காயமடைந்த சுமார் ஏழுக்கும் மேற்பட்டோர் மூதூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களுள் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




Post a Comment

0 Comments