Subscribe Us

header ads

இந்தியா – வங்கதேசம் இடையிலான காலிறுதிப் போட்டியின்போது, ரோஹித் சர்மாவுக்கு அவுட் கொடுக்க அம்பயர் மறுத்ததற்கு ஐசிசி தலைவர் முஸ்தபா கமால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இந்தியா – வங்கதேசம் இடையிலான காலிறுதிப் போட்டியின்போது, ரோஹித் சர்மாவுக்கு அவுட் கொடுக்க அம்பயர் மறுத்ததற்கு ஐசிசி தலைவர் முஸ்தபா கமால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த இந்தப் போட்டியின்போது வங்கதசே வீரர் ரூபெல் ஹுசைன் வீசிய பந்து புல்டாஸ் ஆக ரோஹித்தை நோக்க வந்தது. அப்போது 90 ரன்னில் இருந்தார் ரோஹித். அப்போது அவர் பந்தை  தூக்கி அடித்தபோது அது கேட்ச் ஆனது. ஆனால் அந்தப் பந்தை லெக் அம்பயர் ஆலிம் தர் நோ பால் என்று கூறவே, அம்பயர் இயான் கோல்டும் நோ பால் என்று அறிவித்தார். இதனால் ரோஹித் தப்பினார். பந்து இடுப்புக்கு மேலே புல் டாஸாக போனதால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷான் வார்னே கூறுகையில், அது நிச்சயம் விக்கெட்தான். அவுட் கொடுத்திருக்க வேண்டும். அம்பயர் ஆலிம் தர் நம்பிக்கை இல்லாதவராக அந்த அவுட்டை மறுத்துள்ளார். சரியாக அனுமானிக்கத் தவறி விட்டார் என்று கூறியுள்ளார்.

வங்கதேசத்திலும் இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு எதிராக வேண்டுமென்றே அம்பயர் செய்த சதி என்பது வங்கதேசத்தினரின் குற்றச்சாட்டு. அம்யர் இவான் கோல்டும் பாகிஸ்தான் அம்பயர் அலீம் தாரும் சேர்ந்துதான் இந்த சதியை செய்துவிட்டதாக வங்கதேச ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக வங்கதேசம் முழுவதும் நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகப் பெரிய அளவிலான கண்டனப் போராட்டங்களை நடத்தினர். பாகிஸ்தான் தேசியக் கொடியை எரித்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

ஐசிசி தலைவராக உள்ள முஸ்தபா கமாலும் தற்போது இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். இவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். அந்த நாட்டு திட்டத் துறை அமைச்சரும் கூட. ஐசிசி இந்தியன் கிரிக்கெட் கவுன்சிலாக மாறி விட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஐசிசி தலைவர் பதவியிலிருந்து விலகவும் தயாராக இருக்கிறேன். அது இந்தியன் கிரிக்கெட் கவுன்சிலாகி விட்டது. ஐசிசியில் என்னால் செயல்பட முடியும். ஆனால் அது இந்தியன் கிரிக்கெட் கவுன்சிலாகி விட்ட பிறகு அதில் என்னால் நீடிக்க முடியாது என்றார் கமால். இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசியில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் முறைப்படி புகார் பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments