சீன நாடு சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் பல சிற்றரசர்களால் ஆளப்பட்டு, பல்வேறு நாடாகச் சிதறிக்கிடந்தது. அப்போது, மக்களின் மனசாட்சியாக தோன்றினார் கன்பூசியஸ் என்னும் உன்னத அறிஞர்.
சட்டங்கள், மதக்கோட்பாடுகள் என எல்லாவற்றையும் படித்து, அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், விவாதிப்பதும் கன்ஃபூசியஸின் தனிப்பெரும் குணமாக வளர்ந்தது.
அவர்,அரசன் என்பவன் தகுதியினால் தெரிவு செய்யப்பட வேண்டுமே தவிர, பரம்பரை மட்டுமே தகுதியாக இருக்கக்கூடாது என்று உரக்கக் குரல் கொடுத்தார்.
மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்க அணி திரள, அரசன் அதிர்ந்து போனான். கன்ஃபூசியஸைக் கைது செய்தால் அசம்பாவிதம் நேரலாம் என யோசித்த அரசன், புத்திசாலித்தனமாக அவருக்கு ‘சட்டத்துறை அமைச்சர்’ என ஒரு பதவி பெரும் மாளிகை, கை நிறையச் சம்பளம் எல்லாம் கொடுத்து நாட்டின் சட்டங்களை மாற்றும்படி கேட்டான்.
அவர் மக்கள் நலனுக்காக புதிது புதிதாகச் சட்டங்களை இயற்றி மன்னனிடம் கன்ஃபூசியஸ் ஒப்படைத்தபோது எதுவும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை
சிறிது காலத்திலேயே, இந்தப் பதவியினால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் மன்னரிடம் சொன்னார்.
இதனால் கோபமடைந்த மன்னன், சீமான் போல வாழ்வதைவிட்டு, ஏன் பிச்சைக்காரனாக வீதியில் திரியவிரும்புகிறீர்கள் என கேட்டார்.
அதற்கு, ‘‘எது வசதியானதோ அதைச் செய்யாதே! எது சரியானதோ அதைச் செய்! என என் மனம் தொந்தரவு செய்கிறது’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார் கன்ஃபூசியஸ்.
மேலும் அவர், ‘மனிதர்கள் இயல்பாகவே எளிதான செயல்களைச் செய்யவே ஆசைப்படுகிறார்கள். அது சரியல்ல.
வெற்றி பெறேவண்டுமானால், எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்; எது சரியானதோ அதைச் செய்யுங்கள்!’ என்ற் சொன்னதோடு, சொன்னது போலவே வாழ்ந்து காட்டியதால் இவரது வார்த்தைகள் சீனா முழுவதும் மதம், சமுதாயம் மற்றும் அரசியலில் பெரும் மாற்றங்களை உண்டாக்கியது.
0 Comments