புத்தளம் சிறு கடல் வாவியில் அரிய வகை மீன் இனம் ஒன்று பிடிபட்டுள்ளது.
சனிக்கிழமை (14) இரவு மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் பாரிய பாம்பினை போன்ற வடிவிலான இந்த மீன் பிடிபட்டுள்ளது.
“குழுவி” என அழைக்கப்படும் இந்த மீன் இனம் மிக அரிதாகவே காணப்படுவதாகவும் , இந்த மீன் வகையினை சேனை பாம்பு என மறு பெயர் கொண்டு அழைப்பதாகவும் இந்த மீனை கொள்வனவு செய்த புத்தளம் கடற்கரை வீதி வாடியின் உரிமையாளர் எம்.ஆர்.எம். நில்பான் தெரிவித்தார்.
0 Comments