அவுஸ்திரேலியாவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கேட்(kate) என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இதில் இவரது பெண் குழந்தை நலமாக இருந்தது. ஆனால் ஆண் குழந்தையின் நாடித் துடிப்புக் குறைந்துகொண்டே வந்து, நின்றுவிட்டதால் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கேட், தனது அறையை விட்டு எல்லோரையும் வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இதன்பின் தன் கணவர் டேவிட்டிடம்(David) குழந்தையை எடுத்து, தன் மார்பு மேல் வைக்க கூறியதுடன், கண்ணீர் பெருகியபடி குழந்தையைக் கட்டிப் பிடித்து, உடலைச் சூடேற்றியுள்ளார்.
இந்நிலையில் நீண்ட முயற்சிக்குப் பிறகு குழந்தை லேசாக அசைந்துள்ளது, இதனைத் தொடர்ந்து தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டதால் அக்குழந்தை உயிர் பிழைத்தது.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தடவை கூட எங்கள் குழந்தை ஜாமிக்கு(Jamie) உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதில்லை என்றும் அவன் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறான் எனவும் தெரிவித்துள்ளனர்.
0 Comments