Subscribe Us

header ads

ராஜிதவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு


அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்றைய தினம் தேசிய சுதந்திர முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் ராஜித சேனாரட்ன மீன்வளத்துறை அமைச்சராக இருந்த போது கடல் வளத்தை சூறையாடி 2 ஆயிரம் மில்லியன் ரூபாவை முறைகேடாக பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பலவந்தமாக இந்த வளங்களை அமைச்சர் ராஜித சேனாரட்ன சூறையாடியுள்ளார் என முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

எனவே தற்போதைய நல்லாட்சியின் கீழ் இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments