Subscribe Us

header ads

சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சலாக பதவி உயர்வு வழங்கவுள்ள ஜனாதிபதி


ஜனநாயகக் கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பீல்ட் மார்சலாக பதவி உயர்த்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி குறித்த பதவி உயர்வு வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்விற்காக பாதுகாப்பு அமைச்சு தற்பொழுது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

அதற்கமைய இராணுவத்தில் அதி உயர் பதவிகளில் ஒன்றாக பீல்ட் மார்சலாக  முதல் முறையாக இலங்கையில் சரத்பொன்சேகா நியமிக்கபடவுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்திற்கு சரத் பொன்சேகாவே தலைமை தாங்கியிருந்தார்.

எனினும் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் சரத் பொன்சேகா தனது பதவிகளை இழந்ததுடன் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய சரத் பொன்சேகா இழந்த அனைத்து பதவிகள் மற்றும் வரப்பிரசாதங்களும் மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments