இலங்கையில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் மத மற்றும் சமய அமைப்புகளை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பொதுச்சபை கூட்டத்தின் போது இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பொதுபல சேனா உட்பட்ட அமைப்புக்கள் செயற்பட்ட விதம் குறித்து பொதுசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளதாகவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.


0 Comments