உலகக்கோப்பை கிரிக்கெட்டின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான்- அயர்லாந்து
அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அந்த அணியின் கேப்டன்
போர்ட்டர் பீல்டு சதத்தால் 237 ரன்கள் எடுத்தது.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேசாத், சர்பிராஸ் அக்மது களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரும் முதல் 6 ஓவர் வரை நிதானமாக விளையாடினர். 7-வது ஓவரின் கடைசி பந்தில் ஷேசாத் முதல் பவுண்டரியை அடித்தார். 8-வது ஓவரின் 5-வது பந்தில் சர்பிராஷ் அக்மது ஒரு பவுண்டரி அடித்தார்.
10-வது ஓவரை டாக்ரெல் வீசினார். இந்த ஓவரில் 4 பவுண்டரிகள் அடிக்கப்பட்டது. ஷேசாத் 52 பந்தில் 5 பவுண்டரியுடன் இரை சதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து சர்பிராசும் 58 பந்தில் 3 பவுண்டரியுடன் அரை சதம் அடித்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த இந்த ஜோடி 22.4 ஓவரில் 120 ரன்கள் இருக்கும்போது பிரிந்தது. ஷேசாத் 63 ரன்கள் எடுத்த நிலையில் தாம்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து சர்பிராஸ் உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார்.
சோஹைல் 3 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். ஆடுத்து 3-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் உடன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். அணியின் ஸ்கோர் 208 ரன்னாக இருக்கும்போது 39 ரன்கள் எடுத்திருந்த மிஸ்பா ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார்.
4-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் உடன் உமர் அக்மல் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய சர்பிராஸ் கான் சதம் அடித்தார். சர்பிராஸ் கானுக்கு இதுதான் முதல் சதமாகும்.
சர்பிராஸ் சதம் அடித்த கையோடு பாகிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வெற்றி இலக்கை 46.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. சர்பிராஸ் 101 ரன்களுடனும், உமர் அக்மல் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இம்ரான் நசீர் சதம் அடித்தார். அதன்பிறகு தற்போதுதான் சர்பிராஸ் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments