(எம்.எம்.சில்வெஸ்டர்)
11ஆவது உலகக் கிண்ணப் போட்டி கள் மிகவும் சூடு பிடித்துக் கொண்டிருக்கும்
இத்தறுவாயில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் விவாதத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் உள்ளாகியிருக்கும் ஒரேயொரு விடயம் என்னவெனில், ‘எந்த அணி உலகக் கிண்ணத்தை கை ப்பற்றப்போவது’ என்பதாகும். தாம் விரும்பும் அணி உலகக் கிண்ணத்தை சுவீகரிப்பதற்காக தமக்கு விருப்பமான அணிக்கான வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் ஊடாக வழங்கி வருகிறார்கள். இதுதவிர சமூக வலைத்தளங்களில் காணப்படும் கருத்துக் கணிப்புகளில் முந்தி யடித்துக்கொண்டு வாக்குகளை பதிவுசெய்தும் வருகிறார்கள்.
இது இவ்வாறிருக்க எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட்டுக்கு ஓர் மகத்தான நாளாகும். இந்நாள் இலங்கையர் அனைவருக்கும் சரித்திர முக்கியத்துவமிக்க நாளாகும். ஆம், இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்பு, அதாவது 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி அர்ஜுன ரண துங்க தலைமையிலான இலங்கை அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்த பொன் நாளாகும். அன்றைய தினம் உலக வரைபடத்தில் நமது இலங்கை திருநாட்டை உலகத்தார் அனைவரும் தேடினார்கள் என்று கூறினால் தவறி ல்லை. இக்காலப் பகுதியில் கத்துக்குட்டியாக வலம் வந்துகொண்டிருந்த இலங்கை அணி முதலாவது உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய இரு தசாப்த இடைவெள யில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியமையானது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் பெருமையான விடயமாகும்.
1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிக் கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்ற அந்த பொன்னான தருணத்தை மீண்டும் ஒரு முறை எண்ணிப்பார்ப்போம்.
6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெற்றது. இத் தொடரை இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து நடத்தின. இதன் ஏ குழு வில் இலங்கை, இந்தியா,
அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே, கென்யா ஆகிய 6 அணி களும் பி குழுவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து ஆகிய 6 அணிகளும் என மொத்தமாக 12 அணிகள் பங்குகொண்டன.
இலங்கையில் காணப்பட்ட உள்நாட்டு கலவரம் காரணமாக அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் கொழும்பில் விளையாட வில்லை. இதனால் இப்போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஸிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 6 விக் கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இதன் பின்னர் இந்திய அணியை இலங்கை அணி டெல்லி பெரோசா கொட்லா மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி தனது குழுவில் அங்கம் வகித்திருந்த ஆபிரிக்க நாடான கென்யா அணியுடன் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் விளையாடியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 398 ஓட்டங்களைப் பெற்றது. இந்த மொத்த ஓட்ட எண்ணிக்கையானது சர்வதேச ஒருநாள் அரங்கில் அணியொன்றினால் பெறப்பட்ட அப்போதைய அதிகூடிய மொத்த ஓட்ட சாதனையாக அமைந்தது. இப்போட்டியில் அரவிந்த டி சில்வா 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டி யில் மிகவும் பலம் வாய்ந்த இந்திய அணியை இலங்கை அணி எதிர் கொண்டது. அதுவும் அவர்களது சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்களின் முன்னிலையில் இடம்பெற்றது. இப்போட்டி இந்தியாவின் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மார்ச் 13 ஆம் திகதியன்று நடைபெற்றது.
இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 98 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மிகவும் ஸ்திரமான நிலையில் காணப்பட்டது. எனினும் இலங்கை பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பந்து வீச்சினால் மேலும் 22 ஓட்டங்களை பெறுவதற் குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இதன்போது 34.1 ஓவர்களில் 8 விக்கெட்டு களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றிருந்தது. இக்கட்டான நிலையி லிருந்வேளையில் இந்திய அணி தோல்வி அடைவதை விரும்பாத சில இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை வீரர்கள் மீது போத்தல்களாலும், பழ ங்களாலும் வீசி அடித்து இடையூறுகளை விளைவித்தனர். இதனை கட்டு ப்படுத்த முடியாததன் காரணமாக இப்போட்டியில் இலங்கை அணி வெற்றதாக போட்டியின் மத்தியஸ்தர் அறிவித்தார். இதன் மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்ற முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது.
ஆறாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி பாகிஸ்தானின் லாஹூர் கடாபி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியும் மார்க் டெய்லர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் மோதிக்கொண்டன.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இல ங்கை அணியின் அதிரடி ஆரம்ப வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் ரொமேஷ் களுவித்தாரன ஜோடி கள மிறங்கியது. இவ்விருவரும் வெகு விரைவில் ஆட்டமிழந்துச் சென்ற மை இலங்கை ரசிகர்களை கவலையடையச் செய்தது. இதன் பின்பு ஹசங்க குருசிங்க மற்றும் அரவிந்த சில்வா ஜோடி நிதானம் கலந்த ஆக்ரோஷத்துடன் விளையாடியது. இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 148 ஆக இருந்தபோது ஹசங்க குருசிங்க 65 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணி த்தலைவர் அர்ஜுன மற்றும் உப அணித்தலைவர் அரவிந்த ஆகியோர் பொறுப்பை உணர்ந்து விளையாடினர். இவர்களிருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலிய பந்து வீச் சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத் திரம் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தை முதன் முதலாக சுவீகரித்தது. அரவிந்த டி சில்வா ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களையும் அர்ஜுன 47 ஓட்டங் களையும் பெற்றுக் கொடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக அர விந்த டி சில்வா தெரிவானதுடன் தொடரின் நாயகனாக சனத் ஜயசூரிய தெரிவானார்.
அதுவரை காலமும் உலகக் கிண்ணத் தொடரை நடத்திய நாடொன்று கிண்ணத்தை வென்றதில்லை என்ற சரித்திரத்தை இலங்கை கிரிக்கெட் அணி மாற்றியமைத்தது. அதுவும் போட்டியை முதன்முதலாக ஏற்பாடு செய்த நாடொன்று உலகக் கிண்ணத்தை வென்று முத்திரை பதித்தது இலங்கை.


0 Comments