உத்தரப் பிரதேச மாநிலம் மேற்கு பகுதியில் உள்ள ஹத்ராஸ் நகரில் ஒரு இளம்பெண்ணும் அவரது நண்பரும் பைக்கில் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை பைக்குகளில் துரத்தியது. இருவரையும் சுற்றி வளைத்து புறநகர் பகுதிக்கு கொண்டு சென்றனர்.பின்னர் அங்கு வைத்து அவர்களை தாக்கினர். இதுகுறித்து வீடியோ ஒன்று வாட்சப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோ காட்சியில் அந்த பெண்ணையும் வாலிபரையும் தடியால் தாக்குகிறார்கள் அந்த பெண் அவர்களிடம் விட்டுவிடும்படி மன்றாடுகிறார் . அந்த பெண் அவர்களை அண்ணா என அழைக்கிறார்.அந்த பையனை தனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்றும் அவன் தனது பள்ளி தோழன் என்றும் கூறுகிறார்.
கருணை காட்டும் படி அவர் மன்றாடுகிறார். அவர் அந்த பையனை காப்பாற்ற முயற்சிக்கிறார்.அந்த பையன் பைக்கிற்கும் பெண்ணுக்கும் இடையே மறைந்து நின்று கொள்கிறார்.தனது நண்பரிடம் மீண்டும் என்னை அழைக்க கூடாது என கூறுகிறார்.
இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒரு வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்தார். மற்றொருவர் ஏன் படம் பிடிக்கிறாய் என கேட்டத்தற்கு வாட்சப்பில் இந்த வீடியோவை அப்லோடு செய்ய என கூறுகிறார்.
அந்த இளம் பெண்ணிடம் இந்த விஷயத்தை குடும்பத்தாரிடம் கூறக்கூடாது என அந்த கும்பல் மிரட்டி உள்ளது.ஆனால் இந்த காட்சி வாட்சப்பில் பகிரபட்டதும் அதை இளம் பெண்ணின் உறவினர் ஒருவர் பார்த்து உள்ளார். போலீசில் புகார் செய்து உள்ளார்.
இது குறித்து கூறிய இளம் பெண் ”அவர்கள் நாங்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறி இருவரையும் அடித்து உதைத்தார்கள்.நான் அவர்களிடம் மன்றாடினேன். எங்களை விட்டு விடும்படி அவ்ர்கள் எங்கள் பெயர்களை கூறும் படி கேட்டு தொடர்ந்து எங்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள்”. என கூறினார்.
இளம்பெண்ணும் அந்த கும்பலும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த வாலிபருடன் சுற்றியதால் கும்பல் கண்டித்து உள்ளது எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.


0 Comments