Subscribe Us

header ads

உயிருடன் இருப்பவர்களின் பெயர்களை கட்டடங்களுக்கு வைக்க அனுமதியில்லை: ரணில் அதிரடி


பலஸ்தீனத்தின் காஸா பள்ளத்தாக்கில் மஹிந்த ராஜபக்ஷ தொழிற்பயிற்சி மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 13 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவையாற்றாமல் மக்கள் நிதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார்கள்.

முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்க, மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோர் முன்னெடுத்த கொள்கைகள் மஹிந்த சிந்தனையில் மாற்றப்பட்டுள்ளன.

குறித்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு தமது சொந்த பணத்தை செலவிடாமல் மக்களின் பணத்தை செலவிடுவதே மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் இலங்கையின் உயர் தலைமைகளின் விடுமுறை விடுதிகளுக்காக அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 50ற்கும் அதிகமான அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் உயிருடன் இருப்பவர்களின் பெயர்களை அபிவிருத்தி திட்டங்களுக்கும், கட்டடங்களுக்கும் வைக்கும் கலாச்சாரத்தை தான் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை எனவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments