Subscribe Us

header ads

108 இன்னிங்சில் 20 சதங்களை அடித்து சாதனை படைத்த அம்லா: விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்


கான்பெராவில் இன்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்லா சதம் அடித்தார்.

இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 108 போட்டிகளிலேயே 20 சதங்களை அடித்தவர் என்ற சாதனையை அம்லா படைத்தார். இதற்கு முன் 133 போட்டிகளில் 20 சதங்களை விளாசியிருந்தார் இந்திய வீரர் விராட் கோலி. இன்றைய சதத்தின் மூலம் கோலியின் சாதனையை அம்லா முறியடித்துள்ளார். மேலும் இன்றைய போட்டியில் 159 ரன்களை குவித்ததன் மூலம், ஒரு நாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் அம்லா பதிவு செய்தார். தென் ஆப்பிரிக்க அணியில் 2வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு அதிக ரன்களை குவித்து அம்லா-டு பிளிஸ்சிஸ் ஜோடி(247 ரன்கள்) சாதனை படைத்தது.

கடந்த போட்டியில் 400 ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்கா, இப்போட்டியிலும் மீண்டும் 400 ரன்களுக்கு மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments